- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி கேப்டன்சினா இப்படி தான் இருக்கும். ஒரு நைட்ல யாரும் மாறிடமாட்டாங்க. ரோகித் சர்மாவை மறைமுகமாக...

தோனி கேப்டன்சினா இப்படி தான் இருக்கும். ஒரு நைட்ல யாரும் மாறிடமாட்டாங்க. ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கிய அஸ்வின்

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்று  பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ரசிகர்களின் இதயங்களில் காயங்கள் இன்னும் ஆறவில்லை. குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, அணியில் இடம் கிடைக்காமல் போன தவறின் சுவடுகள் இன்னும் நீங்கவில்லை.

WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்ததால், இந்த இழப்பு மற்றொரு ICC கோப்பைக்கான இந்தியாவின் காத்திருப்பை நீட்டித்துள்ளது. இந்த தோல்வியால் இந்திய  கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மேல் கோபங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அஸ்வின் கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அவரை மைதானத்தின் தன்மை காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என காரணம் சொல்லப்பட்டடு.

இந்நிலையில் சமீபத்தில் WTC குறித்து பேசிய அவர் “வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா! இது ஒரு அற்புதமான இறுதி போட்டி. அவர்கள் வெற்றிக்கு முற்றிலும் தகுதியானவர்கள். மார்னஸ் லாபுஷாக்னே போன்ற சில வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் ஓரிரு போட்டிகளில் விளையாடியிருந்ததால் ஆஸி அணிக்கு அது ஒரு கூடுதல் பலமாக இருந்தது.

- Advertisement 2-

ஏனென்றால் ஒரு-டெஸ்ட் போட்டியில் யார் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் அவர்கள் வெற்றிக்கு முற்றிலும் தகுதியானவர்கள். கடைசி WTC சுழற்சியில் கூட, அவர்கள் ஒரு சிறிய தோல்வியால் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. அவர்கள் இந்தியாவைப் போல ஒரு நிலையான டெஸ்ட் அணியாக இருந்து வருகின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்று இந்தியாவில் ஏக்கம் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது. ரசிகர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். இந்த வீரரை நீக்கிவிட்டு அந்த வீரரை சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றல் நடைபெறுகிறது. ஆனால் ஒரு வீரரின் தரம் ஒரே இரவில் மாறாது.

எம்.எஸ். தோனியின் தலைமைத்துவம் பற்றி நம்மில் பலர் பேசுகிறோம். அவர் என்ன செய்தார்? எதையும் மிகவும் எளிமையாக வைத்திருந்தார். அவரது கேப்டன்சியில், நானும் விளையாடியுள்ளேன். அவர் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுப்பார். அதே அணி ஆண்டு முழுவதும் மாற்றம் இல்லாமல் விளையாடும். அந்த பாதுகாப்பு உணர்வு ஒரு வீரருக்கு மிகவும் முக்கியமானது” என தோனியைப் புகழ்ந்துள்ளார் அஸ்வின்.

சற்று முன்