- Advertisement 3-
Homeவிளையாட்டுயோவ், உன்ன பாத்தாலே பொறாமையா இருக்குயா... உன்னால மட்டும் எப்படியா முடியுது.. சக வீரர் குறித்து...

யோவ், உன்ன பாத்தாலே பொறாமையா இருக்குயா… உன்னால மட்டும் எப்படியா முடியுது.. சக வீரர் குறித்து ஆச்சர்யப்பட்ட அஷ்வின்

- Advertisement 1-

சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக வலம் வரும் அஸ்வின் யூடியூபராகவும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். எப்படி பழைய தயாரிப்பாளர்கள் மார்க்கெட் போன நடிகர்கள் எல்லாம் தங்களுடைய சினிமா பார்வையை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்களோ அதே போல் அஸ்வின் கிரிக்கெட் தொடர்பான விமர்சனங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அஸ்வின் ஆசஸ் கிரிக்கெட் தொடர் குறித்து தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

இதில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் பார்க்கும்போது தமக்கு பொறாமையாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கிறிஸ் வொக்ஸ் அடுத்த மூன்று போட்டிகள் விளையாடி 19 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து பேசிய அஸ்வின், கிறிஸ் வொக்ஸ் எவ்வளவு விளையாடுகிறாரோ அவ்வளவு மெருகேறிக் கொண்டு செல்வார். ஆனால் அவர் இங்கிலாந்தின் பிளேயிங் லெவனின் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது.

இங்கிலாந்து தவிர வேறு நாட்டில் பிறந்திருந்தாலும் நிச்சயமாக அந்த நாட்டின் தேசிய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றிருப்பார். கிறிஸ் வொக்ஸ் இயற்கையாகவே சிறந்த விளையாட்டு வீரர் அவர் பல்வேறு விஷயங்களை சுலபமாக செய்வது போல் தெரியும்.

- Advertisement 2-

அவருடைய பந்துவீச்சு முறையை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். இனி எதிர்காலத்தில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளராலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் எல்லாம் எடுக்க முடியாது.

அந்த அளவுக்கு பிராடும் ஆண்டர்சனும் சாதனை செய்திருக்கிறார்கள். தற்போது பிராட் ஓய்வு பெற்றிருப்பதன் மூலம் கிறிஸ் வொக்ஸ் இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என நான் நம்புகிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களுடைய அடுத்த டெஸ்ட் போட்டியை ஜனவரி மாதத்தில் தான் விளையாடுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்