- Advertisement 3-
Homeவிளையாட்டுஅது பெரிய ரகசியம்.. மெக்கல்லம் முன்னாடி சொன்னா கதை முடிஞ்சுது.. அக்சர் படேல் அதிரடி!

அது பெரிய ரகசியம்.. மெக்கல்லம் முன்னாடி சொன்னா கதை முடிஞ்சுது.. அக்சர் படேல் அதிரடி!

- Advertisement 1-

பலம் வாய்ந்த அணிகளாக திகழப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) ஆரம்பமாக உள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க இங்கிலாந்து அணியும், இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் கட்டுப்படுத்த இந்திய அணியும் பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்காக தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

ஒரு பக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியை தோற்கடிப்போம் என்றும் இன்னொரு பக்கம் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்திற்கு டெஸ்ட் போட்டிகளில் முற்றுப்புள்ளி வைப்போம் என்பது போன்ற கருத்துக்களையும் சவாலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்திய மண்ணில் சுழற்பந்து அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இவர்கள் நிச்சயம் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசைக்கு ஒரு தடுமாற்றத்தை கொடுப்பார்கள் என்று தான் தெரிகிறது. அதிலும் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல், கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்தார்.

இந்த முறை மீண்டும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், அவரது பந்துவீச்சு, இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதனிடையே சமீபத்தில் நடந்த பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் அச்சர் படேல் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தனது பவுலிங்கின் ரகசியம் பற்றி தெரிவிக்குமாறு கேள்வி கேட்கப்பட இதற்கு அவர் சொன்ன பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

- Advertisement 2-

இங்கிலாந்தின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த பிசிசிஐ விருதுகள் விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். அவர் முன்னிலையில் பேசிய அக்சர் படேல், “நான் என்னுடைய பவுலிங் பற்றி எதையும் இங்கே சொல்ல போவதில்லை. அது மிகவும் ரகசியமான ஒன்று. பவுலிங்கில் நான் மேம்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் உள்ள சூழலில் நான் எதையும் சொல்ல மாட்டேன். ஏனென்றால் மெக்கல்லம் இங்கே இருக்கிறார்” என வேடிக்கையாக அக்சர் படேல் தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ விருதுகள் நிகழ்வில், கடந்த 2020 – 21 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக வீரர் என்று விருதை அக்சர் படேல் தற்போது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்