- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த 4 ரன்னே தான்.. பங்களாதேஷ் தோற்க காரணமாக இருந்த நடுவரின் முடிவு.. இப்டி புலம்ப...

அந்த 4 ரன்னே தான்.. பங்களாதேஷ் தோற்க காரணமாக இருந்த நடுவரின் முடிவு.. இப்டி புலம்ப விட்டுட்டாங்களே..

- Advertisement 1-

டி 20 உலககோப்பை தொடரில் மற்றுமொரு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் நடுவர் எடுத்த முடிவு ஒன்று தற்போது அதிக விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குரூப் டி-யில் இடம் பெற்றிருந்த தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் நியூயார்க் மைதானத்தில் மோதி இருந்தது. இந்த மைதானத்தில் இதுவரை 140 ரன்களை எந்த அணிகளும் கடக்காத சூழலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இதற்கு முந்தைய போட்டியில் எப்படி விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டதோ அதேபோல ஒரு நிலை தான் மீண்டும் ஒருமுறை தெனாப்பிரிக்காவுக்கு அரங்கேறி இருந்தது. தொடக்க வீரர் டி காக் 18 ரன்களில் அவுட்டாக, அடுத்த 3 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 23 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாற, பின்னர் வந்த கிளாஸன் மற்றும் மில்லர் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்த்திருந்தனர். இதனால் 100 ரன்களை கடந்த தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. இந்த மைதானங்களில் நூறு ரன்களை கடப்பதே சிரமமாக இருந்து வருவதால் ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழக்க, ஹிருதாய் மற்றும் மகுமுதுல்லா நிதானமாக ரன் சேர்த்து தங்களின் அணியை வெற்றிப்பாதை நோக்கி இழுத்துக்கொண்டு சென்றிருந்தனர். அப்படி ஒரு சூழலில் கடைசி ஓவரில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த ஓவரை சிறப்பாக வீசி 2 விக்கெட்கள் எடுத்த கேசவ் மகாராஜ், ஆறு ரன்களை தான் கொடுத்திருந்தார்.

- Advertisement 2-

இதனால் தென்னாபிரிக்க அணி 4 ரன்களில் திரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. ஆனால் இதே போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு நடந்த ஒரு துயரமான விஷயம் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தி விட்டது என்பது தான் சோகமாக அமைந்துள்ளது.

ஒட்நெயில் பார்ட்மன் வீசிய 18-வது ஓவரில் வந்த பந்தை மக்முதுல்லா அடிக்க தவற அது அவரது காலில் பட்டிருந்தது. இதன் பெயரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எல்பிடபிள்யூ அப்பீல் செய்ய நடுவரும் உடனே அவுட் கொடுத்து விட்டார். இதற்கிடையே அவரது காலில் பட்ட பந்தும் பவுண்டரிக்கு சென்று விட, மகுமதுல்லா டிஆர்எஸ் முடிவையும் எடுத்திருந்தார்.

அதில் மூன்றாவது நடுவரும் நாட் அவுட் என அறிவித்திருந்தார். ஐசிசி கிரிக்கெட் விதிப்படி நடுவர் அவுட் கொடுத்ததன் பெயரில் அந்த பந்து 4 ரன்கள் சென்றிருந்தாலும் அது டெத்பால் என அறிவிக்கப்பட, எந்த நான்கு ரன்களால் அவர்கள் தோல்வி அடைந்தார்களோ அதே நான்கு ரன்களை டிஆர்எஸ் விதியால் இழக்கவும் செய்திருந்தது பங்களாதேஷ் அணி.

சற்று முன்