- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவருகிட்ட இப்படி செய்யலாமா.. பும்ராவையே கடுப்பாக்கி வாங்கி கட்டிக் கொண்ட ஆண்டர்சன்..

அவருகிட்ட இப்படி செய்யலாமா.. பும்ராவையே கடுப்பாக்கி வாங்கி கட்டிக் கொண்ட ஆண்டர்சன்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இந்தியாவில் வைத்து இந்த தொடர் நடைபெற உள்ளதால் அந்த அணிக்கு சாதகங்கள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. அதே வேளையில், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் என நிறைய பலம் வாய்ந்த ஆபத்தான வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருப்பதால் அவர்களையும் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது.

இந்திய அணி தங்களுடைய மண்ணில் எப்போதுமே அதிக பலத்துடன் திகழ்ந்து தொடர்களை வெல்வதால் இந்த முறை அதனை மாற்றி எழுதவும் இங்கிலாந்து அணி முயற்சி செய்யும் என்றும் தெரிகிறது. இப்படி பலம் வாய்ந்த இரண்டு அணிகள் டெஸ்ட் தொடரில் மோத உள்ள சூழலில், இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியை வென்று வரலாறு படைத்திருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில் கடைசி விக்கெட்டை எடுத்தால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால் அந்த நாளின் கடைசி கட்டத்தில் விக்கெட் விழாமல், பேட்டிங் செய்து கொண்டிருந்தார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அப்போது அவரை அவுட் எடுக்கும் முயற்சியில் ஒரு கட்டத்தில் பந்து வீச்சாளர் பும்ரா சில பவுன்சர்களையும் வீசி இருந்தார். இதனால், ஒரே ஓவரில் 4 நோ பாலுடன் 10 பந்துகளை வீசும் நிலையும் அவருக்கு உருவாகி இருந்தது.

- Advertisement 2-

இது பற்றி தற்போது பேசியுள்ள பும்ரா, “ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்ததால் சோர்வுடன் நான் இருந்த போதிலும் கூடுதல் வேகத்துடன் பந்து வீசினேன். அப்போது நான் வீசிய பவுன்சர் ஒன்று ஆண்டர்சனை தாக்கியதால் அவரிடம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டேன். ஆனால் அதற்கு எந்தவித பதிலையும் ஆண்டர்சன் கூறவில்லை. நான் அன்பாக இருக்க நினைத்தும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளாதது என்னை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணியையும் கடுமையாக கோபமூட்டி விட்டது.

அந்த கோபத்திலேயே நான் எக்கச்சக்கமான பந்துகளை வேகமாகவும், பவுன்சராகவும் வீசினேன். ஆனாலும் ஆண்டர்சனை பாராட்டியே ஆக வேண்டும். நான் சிறுவயதில் இருந்தே அவரது பந்து வீச்சை கவனித்து வளர்ந்து வந்துள்ளேன். 41 வயதிலும் டெஸ்ட் போட்டிகளை அவர் ஆடுவது கிரிக்கெட் மீதான அவருடைய பசியையும், ஆர்வத்தையும் காட்டுகிறது” என பும்ரா தெரிவித்துள்ளார்.

சற்று முன்