- Advertisement -
Homeகிரிக்கெட்மும்பைகிட்ட பலிச்சது நம்மகிட்ட பலிக்காது.. சேப்பாக்கம் கோட்டையில் குஜராத்தை சம்பவம் செய்த சிஎஸ்கே..

மும்பைகிட்ட பலிச்சது நம்மகிட்ட பலிக்காது.. சேப்பாக்கம் கோட்டையில் குஜராத்தை சம்பவம் செய்த சிஎஸ்கே..

-Advertisement-

இந்த ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியை சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றியுடன் தான் தொடங்கி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் இவர்கள் இருவரும் தங்களின் இரண்டாவது போட்டியில் பலப்பரீட்சை நடத்தி இருந்தனர். முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியும் சென்னையின் ஹோம் கிரவுண்ட்டான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்ததால் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து போட்டி முழுக்க ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர்.

அதே வைபில் பேட்டிங்கைத் தொடங்கியிருந்த சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தார். கடந்த போட்டியில் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திரா, இந்த போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து மீண்டும் ஒருமுறை தனது முதல் ஐபிஎல் அரைச்சதத்தை தவற விட்டிருந்தார்.

அவருடன் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ருத்துராஜ், 46 ரன்களில் அவுட்டாக பின்னர் வந்த ஷிவம் துபே தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தொடங்கி வைத்தார். இவர் அதிரடியாக ஆடி 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் தான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் வந்த அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி, ரஷீத் கான் பந்து என்று கூட பார்க்காமல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார். அவரின் ஓவரில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்த ரிஸ்வி, 14 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.

-Advertisement-

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி ஆரம்பத்தில் ஒரு சில ஓவர்கள் அதிரடியாக ஆடினாலும் பின்னர் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தனர். தீபக் சாஹர் தொடக்க வீரர்களின் விக்கெட்டை எடுக்க, பின்னர் விஜய் ஷங்கர் விக்கெட்டை டேரில் மிட்செல் எடுத்திருந்தார். இதன் பின்னர் சாய் சுதர்சன் – டேவிட் மில்லர் இணைந்து சிறப்பாக ஆட, யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது.

மில்லர் அவுட்டான சூழலில், கடைசி கட்டத்தில் தேவைப்படும் ரன்னும் அதிகமாக இருந்தது. 6 ஓவர்களில் 97 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆடிய அவர்கள், இறுதியில் 143 ரன்களை மட்டுமே எடுக்க, 63 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த பேட்டிங் லைன் அப் கொண்ட மும்பை அணியை கட்டுப்படுத்திய குஜராத்தால் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்