- Advertisement -
Homeகிரிக்கெட்நாங்க என்ன சிஎஸ்கேவா.. சத்தமே இல்லாம லக்னோ அணியை காலி செய்த சஞ்சு அண்ட் கோ..

நாங்க என்ன சிஎஸ்கேவா.. சத்தமே இல்லாம லக்னோ அணியை காலி செய்த சஞ்சு அண்ட் கோ..

-Advertisement-

ஐபிஎல் போட்டியில் இன்று நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்தது. இதில் டெல்லி அணி பத்து ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற, இரண்டு அணிகள் சேர்ந்து ஒரு ஐபிஎல் போட்டியில் மீண்டும் ஒரு முறை, மொத்தம் 500 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது. ஐபிஎல் போட்டியில் கடந்த 10 இன்னிங்ஸ்களில் 9 இன்னிங்சில் அனைத்து அணிகளுமே 200 ரன்களை கடந்திருந்தது. அப்படி இருக்கையில் தற்போது நடந்து முடிந்த போட்டியில் இரு அணிகளுமே 200 ரன்னை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள், லக்னோவின் எகானா மைதானத்தில் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடந்த போட்டியில் சென்னைக்கு எதிராக 120 க்கு மேல் குவித்த ஸ்டாய்னிஸ் இந்த முறை நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆகியிருந்தார். மேலும் தொடக்க வீரர் டி காக்கும் 8 ரன்களில் அவுட்டாக, ராகுல் மற்றும் தீபக் ஹூடா இணைந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க அந்த அணியின் ரன்னும் சற்று வேகமாக உயர்ந்தது. கே எல் ராகுல் 76 ரன்களும், தீபக் ஹூடா 50 ரன்களும் எடுத்து அவுட்டாக கடைசியில் வந்த பேட்ஸ்மேன்கள் கிடைத்த பந்துகளில் ரன் சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கிய ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் ஆரம்பத்தில் அதிரடி காட்டி இருந்ததால் பவர் பிளேவில் 60 ரன்களை எட்டியிருந்தனர். ஆனால் மூன்று பந்துகளில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால் சிறிய நெருக்கடி உருவாகியிருந்தது.

-Advertisement-

பின்னர் வந்த ரியான் பராக்கும் 14 ரன்களில் அவுட்டாக, 68 பந்துகளில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 119 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில் கைகோர்த்த கேப்டன் சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் 15 ஓவர்களில் அவர்கள் 144 ரன்கள் சேர்க்க, கடைசி ஐந்து ஓவர்களில் 53 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதனையும் எளிதாக கையாண்ட சாம்சன் – ஜூரேல் ஜோடி, 19 வது ஓவரில் தங்களின் அணியை வெற்றி பெற செய்தனர். முதலில் நிதானமாக தொடங்கிய சஞ்சு சாம்சன், கடைசியில் அதிரடி காட்டி 33 பந்துகளில் 7 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, துருவ் ஜூரேலும் 52 ரன்களுடன் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்