- Advertisement -
Homeகிரிக்கெட்பும்ரா ஓவருக்காக காத்திருந்து ரன் அடிச்சேன்.. பல நாளா போட்ட ஸ்கெட்ச்.. மனம் திறந்த ஜேக்...

பும்ரா ஓவருக்காக காத்திருந்து ரன் அடிச்சேன்.. பல நாளா போட்ட ஸ்கெட்ச்.. மனம் திறந்த ஜேக் ஃப்ரேஷர்

-Advertisement-

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே எப்போதும் இந்தியாவில் உள்ள இளம் வீரர்கள் அதிகம் பேர் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிகத்திறம்பட செயல்படுவார்கள். இந்தியாவில் உள்ள மைதானங்கள் என்பது இந்த வீரர்களுக்கு இன்னும் ஒரு சாதகமாக இருக்கும். அதே வேளையில், ஐபிஎல் தொடரில் ஜொலிப்பதன் மூலம் இந்திய அணிக்கு நுழையவும் வாய்ப்பையும் அவர்கள் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் பல இளைஞர்களின் பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி ஒரு சூழலில் இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு இளம் வீரர்கள் சிலரும் பட்டையை கிளப்பி வருகின்றனர். அதில் அனைவரது நினைவிலும் முதலில் வரும் பெயர் ஜேக் ஃப்ரேசர் தான். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான இவர், இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடி 247 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 247 வரை இருக்கும் நிலையில் பேட்டிங் சராசரியும் 49 ஆக உள்ளது. மேலும் இந்த ஐந்து போட்டிகளில் இரண்டு முறை 15 பந்துகளில் அரைச்சதம் அடித்து எதிரணியினருக்கு துன்பத்தைக் கொடுத்து வரும் ஜேக் ஃப்ரேசர் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் 84 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த ரன்களை அவர் 27 பந்துகளில் எடுத்திருந்த சூழலில், சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தது டெல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

மேலும் அந்த அணியின் ஸ்கோர் 257 என உயரவும் காரணமாக இருந்தவர், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்த சீசனில் பும்ரா ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனும் ஜேக் ஃப்ரேசர் தான். அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ள ஜேக் ஃப்ரேசர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசுகையில், “நான் சற்று பதட்டமாக தான் இருந்தேன். பும்ராவின் வீடியோவை அனைத்து நாட்களிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் போட்டி என வந்துவிட்டால் அனைத்தும் எடுபடாமல் நீங்கள் பந்தை பார்த்து தான் அடிக்க வேண்டி இருக்கும்.

-Advertisement-

உலகின் சிறந்த பந்து வீச்சாளருக்கு எதிராக நான் இப்படி முயற்சி செய்ததை பெரிதாக பார்க்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கும் எனது அணிக்கும் அதிக தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது இந்த போட்டியின் லெவல் உங்களுக்கு தெரியாது. ஆனால் மற்ற அனைத்து லீக்குகளை விட அதிகம் போட்டி உள்ள தொடராகும். அதில் நான் ஒரு பங்காக இருப்பதை அற்புதமாக கருதுகிறேன்” என ஜேக் ஃப்ரேசர் கூறினார்.

-Advertisement-

சற்று முன்