- Advertisement -
Homeகிரிக்கெட்தோனி கூட இப்டி நெனச்சதில்ல.. துபே விஷயத்தில் ருத்துராஜ் எடுத்த வினோத முடிவு.. குழப்பத்தில் சிஎஸ்கே...

தோனி கூட இப்டி நெனச்சதில்ல.. துபே விஷயத்தில் ருத்துராஜ் எடுத்த வினோத முடிவு.. குழப்பத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்..

-Advertisement-

சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகளை குவித்து வந்தாலும் எதிரணியின் சொந்த மைதானத்தில் தட்டு தடுமாறி தான் வெற்றியை நோக்கியும் பயணித்து வருகிறது. ஹைதராபாத், டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணிக்கு எதிராக மட்டும் வான்கடே மைதானத்தில் வெற்றி கண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது லக்னோ அணிக்கு எதிராக நடந்த போட்டியுடன் மொத்தம் மூன்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது அவர்களுக்கு சாதகமாக பார்க்கப்படும் அதே வேளையில் லக்னோ அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்திருந்தது.

அந்த போட்டியை முழுக்க முழுக்க லக்னோ அணி தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் தற்போது அதற்கு அடுத்த போட்டியிலேயே அதே லக்னோ அணியை சேப்பாக்கம் மைதானத்திலும் சிஎஸ்கே எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது.

ஆரம்பத்தில் உள்ளே வந்த ரஹானே, மிட்செல் மற்றும் ஜடேஜா என எந்த பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்க திணறியதால், சிஎஸ்கே அணி 180 ரன்களை தொடுவதே சவாலாக தான் இருந்தது. ஆனால் நான்காவது விக்கெட்டிற்கு கைகோர்த்த ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி, 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் மட்டுமில்லாமல் அணியின் ரன்கள் 200 -ஐ கடக்கவும் உதவி செய்திருந்தனர்.

-Advertisement-

ருத்துராஜின் சதம் மற்றும் ஷிவம் துபேவின் அரை சதம் ஆகியவற்றால், சிஎஸ்கே அணி 210 ரன்கள் என்ற சவாலான இலக்கையும் எட்டி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் கேப்டனாக ருத்துராஜ் எடுத்த முடிவு ஒன்று தற்போது பலரையும் குழம்பி போக வைத்துள்ளது. இதற்கு முன்பு கேப்டனாக இருந்த தோனி எப்போதுமே ஆடும் லெவனில் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்க மாட்டார்.

ஆனால் ருத்துராஜ் போட்டிக்கு போட்டி வீரர்களை மாற்றிக் கொண்டிருப்பது அதிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல, நான்காவது ஆளாக பேட்டிங் இறங்கி, 42 சராசரியும் 154 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ள ஷிவம் துபேவை லக்னோ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் நான்காவது வீரராக களம் இறக்கவில்லை சிஎஸ்கேப் அணி.

மாறாக ஜடேஜாவை நான்காவது வீரராகவும் சிஎஸ்கே களமிறக்கி இருந்தது. லக்னோ அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் இந்த தந்திரம் அவர்களுக்கு கை கொடுத்திருந்தாலும் அதற்கு முன்பு நடந்த போட்டியில் பலன் கிடைக்கவில்லை. ஷிவம் துபே சிறப்பாக ஆடும் இடத்தில் அவருக்கான வாய்ப்பை கொடுக்காமல், இப்படி வித்தியாசமாக சிஎஸ்கே அணி எடுத்து வரும் வினோதமான முடிவுகள் அனைத்து போட்டியிலும் கை கொடுக்குமா என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-Advertisement-

சற்று முன்