- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனியோட பிளானே தான்.. குல்தீப் விக்கெட் எடுக்க துருவ் ஜூரேல் போட்டு கொடுத்த ஸ்கெட்ச்..

தோனியோட பிளானே தான்.. குல்தீப் விக்கெட் எடுக்க துருவ் ஜூரேல் போட்டு கொடுத்த ஸ்கெட்ச்..

- Advertisement 1-

முதல் டெஸ்ட் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கூட ஜெயிக்கும் ரூட்டில் தான் உள்ளது. மூன்று டெஸ்ட்களில் தொடர்ந்து வெற்றி கண்டிருந்த இந்திய அணி தற்போது இறுதிப் போட்டியின் முதல் நாள் முடிவிலும் கூட அதிக அளவில் பலத்துடன் தான் விளங்கி வருகிறது.

ஒரு பக்கம் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், பேர்ஸ்டோ என அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருக்கும் போது இந்திய அணியின் பக்கம் 5 இளம் வீரர்கள் இந்த தொடரிலேயே அறிமுகமாகி உள்ளனர். அப்படி இருந்தும் இப்படிப்பட்ட ஒரு அணியை கொண்டு இங்கிலாந்தை வீழ்த்துவது சாதாரண காரியம் கிடையாது. அதனை சிறப்பாக செய்து அசத்தி வருகிறார் ரோகித் சர்மா.

பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித், கில், இளம் வீரர்கள் துருவ் ஜூரேல், சர்பராஸ் கான் என அனைவரும் கலக்க, பந்து வீச்சிலும் கூட ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா உள்ளிட்ட அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். இதனால் அனுபவம் குறைந்த இந்திய அணியாக இருந்த போதிலும் அவர்களை அசைத்துப் பார்ப்பது இங்கிலாந்து அணிக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது.

கடைசி டெஸ்டின் முதல் நாள் முடிவிலும் கூட இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தற்போது இருக்கும் ஃபார்மிற்கு நிச்சயம் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே தெரிகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில் கடைசி டெஸ்டில் தோனியை போல செயல்பட்டு விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் செய்த சம்பவம் தற்போது ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அறிமுகமான துருவ் ஜூரேல், 2 போட்டிகளில் நல்லதொரு பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், தனது கீப்பிங் பணியையும் சிறப்பாக செய்து வரும் துருவ் ஜூரேல், ஒரு விக்கெட்டிற்காக சிறப்பாக உதவி இருந்தார்.

கேப்டன் தோனி கீப்பராக நிற்கும் போது, சிறப்பாக ஐடியா கொடுத்து பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க வைப்பார். அப்படி தான் தற்போது ஜூரேலும் குல்தீப்பிறகு உதவியுள்ளார். ஒல்லி போப் பேட்டிங் செய்ய, அவருக்கு குல்தீப் பந்து வீச வந்தார். அந்த சமயத்தில் அவரிடம், ‘இப்போது கிரீசை விட்டு ஒல்லி போப் வெளியே இறங்குவார்’ என தெரிவித்தார் ஜூரேல்.

அதற்கேற்ப தனது பந்தையும் குல்தீப் வீச, ஜூரேல் சொன்னது போலவே கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை அடிக்க முயன்றார் ஒல்லி போப். பந்து அவரது பேட்டில் படாமல் வெகு தூரமாக செல்ல மறுகணமே ஸ்டம்பிங் செய்து அசத்தினார் ஜூரேல். அறிமுகமான ஒரு சில போட்டிகளிலேயே கேப்டன் தோனியை போன்று கீப்பிங்கில் ஜூரேல் செயல்பட்டு வருவதாக அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்