- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவரு தான் காரணம்.. 22 வயதில் கிடைத்த வாய்ப்பு.. இளம் வீரரின் வாழ்க்கையையே மாற்றிய தோனி..

அவரு தான் காரணம்.. 22 வயதில் கிடைத்த வாய்ப்பு.. இளம் வீரரின் வாழ்க்கையையே மாற்றிய தோனி..

- Advertisement 1-

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இந்த தொடரில் வெல்ல வேண்டும் என்பது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த தொடரில் புஜாரா, ரஹானே, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறாமல் போனது கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. ஆனால் அதே வேளையில் 22 வயதே ஆகும் இளம் வீரர் ஒருவருக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கி உள்ளதையும் ஒரு பக்கம் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முதல் தர போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பட்டையை கிளப்பி இருந்த துருவ் ஜூரேல் , கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். தொடர்ந்து இவர் சிறப்பாக ஆடிவந்த சூழலில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

சிறுவயதில் இருந்தே பெரிய கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என துருவ் நினைக்க அவரது தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பிடிவாதமாக அழுது புலம்பிய துருவ் கிரிக்கெட் கிட் வாங்கி கேட்டுள்ளார். அதற்கும் அவர் தந்தை மறுப்பு சொல்ல, அவரின் தாய் தங்க நகையை விற்று வாங்கி கொடுத்தார்.

அவரின் தந்தையும் பின் கடன் வாங்கி பேட் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுக்க, மெல்ல மெல்ல தனது கிரிக்கெட் பயணத்தில் மெருகேற்றி 22 வயதிலே டெஸ்ட் அணியிலும் தேர்வாகி கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளார். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததால் திக்கி முக்காடிப்போன துருவ் ஜுரேல், பல உணர்ச்சிவசமான கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தார்.

- Advertisement 2-

இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி கொடுத்த அறிவுரை தனக்கு உதவியது பற்றி தற்போது சில கருத்துக்களை துருவ் ஜூரேல் தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு குழந்தையும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசையில் தான் கிரிக்கெட் பேட்டை எடுப்பார்கள். ஒரு மிடில் கிளாஸ் பையனாக எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது வியப்பாக உள்ளது. இந்திய நாட்டுக்காக ஆட வேண்டும் என பலர் விரும்பும் போது அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். கடந்த ஆண்டு அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவரது மனநிலை பற்றி அவருடன் உரையாடிய போது அவர் என்னிடம் சொன்ன விஷயம் இதுதான். ‘பேட்டிங் செய்யும்போது அடுத்த பந்தை பற்றி மட்டுமே ஆலோசனை செய். வேறு எதிலும் கவனத்தை சிதற விடாதே’ என என்னிடம் அறிவுறுத்தினார். ‘அப்படி செய்யும் போது தான் நமக்கு நெருக்கடி சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே நீ கடினமாக உழைத்ததன் பெயரில் தான் தற்போது இங்கே இருக்கிறாய். முடிவைப் பற்றி கவலைப்படாமல் உன்னுடைய செயலில் மட்டுமே கவனம் செலுத்து’ என்றும் எனக்கு அறிவுரை வழங்கினார்” என துருவ் ஜூரேல் தெரிவித்துள்ளார்.

சற்று முன்