- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனிய மிஞ்சிடுவாரு போல.. கீப்பிங் நின்னப்போ இங்கிலாந்து வீரரை சீண்டிய ஜூரேல்.. அவர் சொன்ன வார்த்தை...

தோனிய மிஞ்சிடுவாரு போல.. கீப்பிங் நின்னப்போ இங்கிலாந்து வீரரை சீண்டிய ஜூரேல்.. அவர் சொன்ன வார்த்தை தான் அல்டிமேட்..

- Advertisement 1-

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த், இஷான் கிஷன், கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இல்லாத போது அந்த பொறுப்பை இளம் வீரர்கள் தலையில் பிசிசிஐ கொடுத்திருந்தது. இதில், இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்டில் விக்கெட் கீப்பர் கே. எஸ். பரத் இடம் பெற்றிருந்தார். அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டும் சற்று விமர்சனங்களை சந்தித்ததால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் துருவ் ஜூரேலுக்கு அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

கடும் நெருக்கடிக்கு மத்தியில் இனிமேல் இந்திய அணியில் எந்த விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்கும் போகிறது என்ற ஒரு இக்கட்டான சூழலில் தனக்கு கிடைத்த ஒரு கடினமான வாய்ப்பை சிறப்பாக கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பயன்படுத்திக் கொண்டார் ஜூரேல். தனது அறிமுக டெஸ்டில் முக்கியமான ஒரு நேரத்தில் 46 ரன்கள் அடித்திருந்த ஜுரேல், இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 90 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 39 ரகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

மூன்றே டெஸ்ட் போட்டிகளில் தனது கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தான் பெரிய ஆள் என்பதை நிரூபித்துள்ள ஜூரேல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனியை போன்றும் சில சமயங்களில் செயல்பட்டு வருகிறார். ஐந்தாவது டெஸ்டில், இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் வெளியே இறங்கி ஆட நினைப்பார் என உடனடியாக ஜூரேல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு சிக்னல் கொடுக்க அவர் கணித்தது போலவே போப் இறங்கி ஆட, ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டிருந்தார்.

பேட்ஸ்மேனின் அடுத்த நகர்வு என்ன என்பதை மிகச் சரியாக கணித்து வரும் ஜூரேல், இன்னும் 10 நாட்களில் ஆரம்பமாகும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். அதிலும் சிறப்பாக பேட்டிங் செய்து டி 20 உலக கோப்பைத் தொடரில் தேர்வாவதற்கான வாய்ப்பையும் உறுதி செய்ய முனைப்பு காட்டுவார் என தெரிகிறது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில், இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி பேட்டிங் செய்ய வரும் போது துருவ் ஜூரேல் சொன்ன வார்த்தை தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க அதிகம் தடுமாறி இருந்தனர் என்றே சொல்லலாம். அப்படி ஒரு சூழலில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான டாம் ஹார்ட்லி பேட்டிங் இறங்குவதற்காக வந்தபோது விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல், “இதோ தொடர்ச்சியாக நன்றாக ஆடும் பேட்ஸ்மேன் வந்து விட்டார்” என கிண்டல் செய்துள்ளார்.

இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கவே தடுமாற ஒரு சுழற்பந்து வீச்சாளரை நல்ல பேட்ஸ்மேன் என ஜூரேல் குறிப்பிட்ட சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சற்று முன்