- Advertisement 3-
Homeவிளையாட்டுதினேஷ் கார்த்திக்கை தட்டித் தூக்கிய இங்கிலாந்து.. இந்தியாவை துவம்சம் செய்ய மாஸ்டர் பிளான்..

தினேஷ் கார்த்திக்கை தட்டித் தூக்கிய இங்கிலாந்து.. இந்தியாவை துவம்சம் செய்ய மாஸ்டர் பிளான்..

- Advertisement 1-

இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து பல சவாலான தொடர்கள் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு தொடரையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு டி 20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த தொடர் முடிவடைந்ததன் பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரும், அதன் பின்னர் உலக டி20 உலக கோப்பை தொடரும் வருவதால் ஜூன் மாதம் வரைக்கும் இந்திய வீரர்கள் மிகவும் தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டி தொடர், இந்தியாவில் வைத்து நடைபெற உள்ளதால் மிகவும் முக்கியமான தொடராகவும் இது பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் அதிக பலத்துடன் இருக்கும் சூழலில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற்றம் காணவும் இந்த தொடர் பெரிய பங்காற்ற உள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஒரு பக்கம், இங்கிலாந்து அணியின் அதிரடி டெஸ்ட் பேட்டிங் உபசரிப்பு ஒரு பக்கம் என இரண்டும் மோதிக் கொள்வதால் டெஸ்ட் தொடரே பரபரக்கும் என்று தான் தெரிகிறது.

அதே போல இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் ஆகிய அணிகள் நான்கு பயிற்சி போட்டிகளில் மோத உள்ளது. இந்த நிலையில், இந்த பயிற்சி போட்டிக்காக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர்கள் இந்திய அணி வீரர் மற்றும் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக்கை நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement 2-

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி இருந்த தினேஷ் கார்த்திக், அதன் பின்னர் பல தொடர்களில் வர்ணனையாளராக தான் செயல்பட்டு வருகிறார். இந்திய வீரர் என்பதால் இங்குள்ள மைதானங்களில் சூழல் பற்றி நன்கு தெரியும் என்பதன் அடிப்படையில் பயிற்சி ஆட்டத்திலேயே திட்டம் போட்டு அவரை தூக்கி உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இதன் காரணமாக இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் கூட இந்திய மைதானங்களை பற்றி தெரிந்து கொண்டு டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்