- Advertisement 3-
Homeவிளையாட்டுஇப்ப பிரச்சனையே ரோஹித் மட்டும் தான்.. ஆனா அவருக்கு கவலையே இல்ல.. அதிருப்தியில் தினேஷ் கார்த்திக்..

இப்ப பிரச்சனையே ரோஹித் மட்டும் தான்.. ஆனா அவருக்கு கவலையே இல்ல.. அதிருப்தியில் தினேஷ் கார்த்திக்..

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே பல இருதரப்பு தொடர்களை இந்திய அணி வென்று அசத்தி வரும் வேளையில், நம்பர் 1 அணியாகவும் திகழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஐம்பது ஓவர் உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி என இரண்டிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்திருந்தது இந்திய அணி.

நம்பர் 1 அணியாக இருந்த போதிலும், இந்தாண்டு நடைபெறும் டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இந்திய அணி ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லாதது பற்றி உருவான விமர்சனத்தினை உடைக்கும் என்றும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இதற்காக இளம் வீரர்களைக் கொண்டு தற்போது இந்திய அணியும் மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள், உலக கோப்பைக்கு முன்னதாக தங்களை தயார்படுத்தவும் உதவும் என தெரிகிறது. அதே வேளையில், அனைத்து இடங்களுக்கும் கடுமையான போட்டியும் இருப்பதால் எந்தெந்த வீரர்கள் கடும் போட்டிக்கு மத்தியில் தங்களின் திறமையை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க போகிறார்கள் என்பதும் பெரிய புதிராகவே உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் கூட ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வரும் அதே வேளையில், கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டு போட்டிகளிலும் ஒரு ரன் கூட சேர்க்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். சுமார் 14 மாதங்கள் கழித்து டி 20 போட்டிகளில் அவர் ஆடியுள்ள போதிலும் இப்படி ஒரு மோசமான தொடக்கம் அவருக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இந்த நிலையில் இது பற்றி தனது அதிருப்தியான கருத்துக்களை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார். “இந்திய அணியின் ஒரே ஒரு தோல்வி கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டும் தான். இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டான ரோஹித், பெரிதாக அதை பற்றி கவலைப்பட மாட்டார் என்றே தெரிகிறது. டி 20 போட்டியிலும் நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கி உள்ளார்.

கேப்டனாகவும் இருக்கும் அவர், முதல் போட்டியில் ரன் அவுட்டானார். இரண்டாவது போட்டியில் பெரிய ஷாட் அடிக்க பார்த்து போல்டு ஆனார். ஆனால் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டிருந்தது” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சற்று முன்