- Advertisement 3-
Homeவிளையாட்டுவேற வழி தெரியல.. தோனியின் படையை சாய்க்க.. முன்னாள் சிஎஸ்கே வீரரிடம் மன்னிப்பு கேட்ட கம்பீர்..

வேற வழி தெரியல.. தோனியின் படையை சாய்க்க.. முன்னாள் சிஎஸ்கே வீரரிடம் மன்னிப்பு கேட்ட கம்பீர்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடர்கள் என வந்து விட்டாலே இந்திய ரசிகர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே கடும் உற்சாகம் அடைந்து விடுவார்கள். இந்தியா உள்ளிட்ட அனைத்து அணி வீரர்களுமே இணைந்து ஆடுவதால் ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு பந்தும் விறுவிறுப்பாக தான் கடைசி வரை செல்லும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடர், அனைத்து சீசன்களிலுமே பட்டையைக் கிளப்பித் தான் வருகிறது.

இந்த ஆண்டும் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ள சூழலில், பல புது வீரர்கள் ஐபிஎல் அணிகளில் தேர்வாகி உள்ளதால் அவர்களின் மீதான ஆவலும் தற்போதே அதிகரித்து விட்டது.

இதனிடையே, அவ்வப்போது பழைய ஐபிஎல் போட்டிகள் பற்றி, அந்த சமயத்தில் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் இதுவரை ரசிகர்கள் தெரியாமல் இருக்கும் தகவலை பற்றி பின்னர் நினைவு கூர்ந்து சொல்வார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நடந்த சம்பவம் பற்றி தற்போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தான் அதிக முறை கோப்பையை வென்றுள்ளது. அந்த வரிசையில், அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு முறையும் அந்த அணியை கவுதம் கம்பீர் தான் வழிநடத்தி இருந்தார். கொல்கத்தா அணியின் ஐபிஎல் தொடரின் பொற்காலம் என்றால் அது கம்பீர் தலைமையில் அவர்கள் ஆடிய ஆண்டுகள் தான்.

- Advertisement 2-

2012 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக, இறுதி போட்டியில் கடின இலக்கை நோக்கி ஆடிய போதும் கடைசி ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து அவர்கள் முதல் ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி தற்போது பேசியுள்ள கவுதம் கம்பீர், “லட்சுமிபதி பாலாஜி காயத்தால் அவதிப்பட்டதால், இறுதி போட்டியில் அவருக்கு பதிலாக பிரெட் லீயை களமிறக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், ப்ரெண்டன் மெக்கல்லத்தை அணியில் சேர்க்க முடியாமல் போனது. இதனால், எனது ஒட்டுமொத்த அணியினர் முன்னிலையில் நான் பிரெண்டன் மெக்கல்லத்திடம் மன்னிப்பு கேட்டிருந்தேன்.

யாருமே அப்படி செய்ய விரும்பமாட்டார்கள். இதனால், எனக்கு மன்னிப்பு கேட்கும் தைரியமும் இருந்தது. மன்னிப்பு கேட்பது தவறு ஒன்றும் கிடையாது” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்