- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் முடிவு சுத்த முட்டாள்தனமானது. உருப்படியாக அதை தொடர்ந்து செயல்படுத்தவும் இல்லை - கம்பீரின் பழைய...

தோனியின் முடிவு சுத்த முட்டாள்தனமானது. உருப்படியாக அதை தொடர்ந்து செயல்படுத்தவும் இல்லை – கம்பீரின் பழைய பேச்சு வைரல்

-Advertisement-

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர். அவர் தலைமையில் இந்திய அணி 3 உலகக்கோப்பைகளை வென்று பல உயரங்களைத் தொட்டது. அவர் தலைமையில்தான் தற்போது அணியில் இருக்கும் பல மூத்த வீரர்கள் அறிமுகமானார்கள்.

அதில் கோலி, பும்ரா, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா என பலரும் அடக்கம். ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக்கி அவரை இன்று உலகின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக்கியுள்ளார் தோனி என்றால் அது மிகையாகாது. பின் வரிசையில் ஆடிக்கொண்டிருந்த அவரை தொடக்க வீரராக மாற்றி பரிசோதனை செய்தார் தோனி.

ரோஹித் ஷர்மா பலமுறை மோசமான ஆட்டத்திறன் காரணமாக பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட போதும், அவரை அணியில் இடம்பெறச் செய்தார் தோனி, 2012 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடிய காமன்வெல்த் போட்டித் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்காக அவர் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோரைக் கூட சுழற்சி முறையில் பென்ச்சில் உட்காரவைத்தார்.

அந்த தொடரில் சுழற்சி முறையில் கம்பீர், சேவாக் மற்றும் சச்சின் ஆகிய மூவரும் சுழற்சி முறையில் அணியில் இருந்து விலக்கப்பட்டனர். அந்த தொடர் முழுவதிலும் மூன்று பேரும் இணைந்து ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடினர். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் இந்த சுழற்சி முறையை தோனி பின்பற்றவில்லை.

-Advertisement-

இந்நிலையில் தோனியின் இந்த சுழற்சி முறை பைத்தியக்கார தனமான ஐடியா என்று இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் 2019 ஆம் ஆண்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதுபற்றி அவர் “இந்த சுழற்சி முறை சுத்த முட்டாள்தனமானது. நான் இதை தோனியிடமே கூறினேன்.  எந்த வீரரும் கேப்டனின் முடிவை மதிக்கவேண்டும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வேலைக்கு ஆகாத யோசனை. நீங்கள் இந்த சுழற்சி முறையை ஆரம்பித்து விட்டு, நாக் அவுட் போட்டிகளில் மட்டும் இதை அமல்படுத்தவில்லை. நீங்கள் ஒரு முடிவு எடுத்தால் அதைக் கடைசி வரை செயல்படுத்த வேண்டும்.” எனக் கூறியிருந்தார். நேற்றைய தினம் குரு பௌர்ணமி தினம் என்பதால் பலரும் தாங்கள் குருவாய் மதிக்கும் நபர்களை வாழ்த்தி பேசி இருந்தனர். அந்த வகையில் ரோகித் சர்மாவுக்கு தோனி குருவாக இருந்து அவரை அணியில் பல முறை தக்க வைத்துள்ளார் என்று கம்பீர் கூறி இருந்தது வைரலானது. அதே சமயம் ரோகித்திற்காக தோனி, அணியின் மூத்த வீரர்களை பெஞ்சில் உட்காரவைத்தால் மூத்த வீரர்களின் கோபத்திற்கு ஆளான இந்த நிகழ்வும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்