- Advertisement -
Homeகிரிக்கெட்அக்சர் படேல் ஓவர்ல ரன் அடிச்சுருக்கலாம்.. 2 பால்ல மேட்ச் மாறிச்சு.. புலம்பிய ஹர்திக் பாண்டியா..

அக்சர் படேல் ஓவர்ல ரன் அடிச்சுருக்கலாம்.. 2 பால்ல மேட்ச் மாறிச்சு.. புலம்பிய ஹர்திக் பாண்டியா..

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்த சீசன் அந்த அளவுக்கு சரியானதாக அமையவில்லை என்றே தெரிகிறது. திடீரென இந்த சீசனில் பலம் வாய்ந்த வகையில் ஆடிவரும் அவர்கள், அதே வேளையில் சில நேரம் தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகின்றனர். இதுவரை 9 போட்டிகள் ஆடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி கண்டுள்ளது.

மற்ற ஆறு போட்டிகளிலும் அவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த முறை அவர்கள் பிளே ஆப் முன்னேறுவதிலும் சற்று நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஐந்து போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அதில் நான்கு அல்லது ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றையும் அவர்களால் உறுதி செய்ய முடியும் என்ற சூழலில், டெல்லி அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியிலும் அவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 257 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி சிறப்பாக ஆடி இருந்தாலும் அவர்களால் டெல்லி அணியின் இலக்கை எட்ட முடியவில்லை. 247 ரன்கள் அடித்திருந்த மும்பை, பத்து ரன்களில் தோல்வியை தழுவியிருந்தது.

ஏதாவது ஒரு ஓவரில் இன்னும் அதிரடி காட்டி இருந்தால் நிச்சயம் அவர்களால் வெற்றியும் பெற்றிருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தோல்விக்கு பின் பேசி இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டி மிக மிக நெருக்கமான போட்டியாக அமைந்திருந்தது. இரண்டு ஓவர்கள் வித்தியாசமாக இருந்தது என்பதை தாண்டி தற்போது இரண்டு பந்துகள் வித்தியாசத்திலும் போட்டிகள் மாறுகிறது.

-Advertisement-

இந்த மாதிரியான போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியில் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பு எடுத்து ஆட நினைத்தோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சில ரன்களை அதிகம் எடுத்திருக்க வேண்டும். இடது கை பேட்ஸ்மேன்கள் அக்சர் படேல் ஓவரில் கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்திருக்கலாம். ஆனால் மிடில் ஓவரில் இந்த போட்டியில் நாங்கள் தவறவிட்ட முக்கியமான ஒரு விஷயம் அதுதான்.

ஜேக் ஃப்ரேஷர் ஆடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஃபீல்டிங்கை பொறுத்து அவர் மிக ரிஸ்க் எடுத்து சில ஷாட்களை ஆடி இருந்தார். ஒரு பயம் இல்லாத இளம் வீரர் ஆட்டமும் அவரிடம் தெரிகிறது” என ஹர்திக் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்