- Advertisement -
Homeகிரிக்கெட்எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இந்த நேரத்துல.. மனமுடைந்த பஞ்சாப் கேப்டன் சாம் கரண்..

எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இந்த நேரத்துல.. மனமுடைந்த பஞ்சாப் கேப்டன் சாம் கரண்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் என வந்துவிட்டாலே பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் போட்டிகளில் தோல்வி அடைவதும் தோல்வி அடைய நேரிடும் போட்டிகளில் வெற்றி அடைவதும் என எதிர்பாராத விஷயங்களை தான் தொடர்ந்து செய்து வரும். இந்த சீசனில் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 11 போட்டிகளில் ஆடி நான்கில் வெற்றி கண்டுள்ளது.

பல போட்டிகளை மிகவும் நெருக்கமாக வந்து தோல்வியடைந்தும், வெற்றி பெற்று வருவதும் என அவர்கள் பல சீசன்களாக தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்த போதிலும் சில காரணங்கள் அவர்களுக்கு பாதகமாக அமைய, லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை தான் தொடர்ந்து அவர்களுக்கு உருவாகி வருகிறது.

அப்படி இருக்கையில் தான் நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்ற போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்டு அவர்கள் ஆடியிருந்தனர். முதலில் ஆடிய பெங்களூர் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 எடுக்க, விராட் கோலி 92 ரன்கள் அடித்ததுடன் மட்டும் இல்லாமல் தன் மீது இருந்த ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்களையும் சிக்ஸர்களை பறக்கவிட்டு தவிடு பொடியாக்கி இருந்தார்.

கடின இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியிலும் மூன்றாவது வீரரான ரிலி ரசவ், அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டாக, 10 ஓவர்களில் 100 ரன்களையும் அவர்கள் கடந்தனர். போட்டி இதன் காரணமாக இன்னும் விறுவிறுப்பாக மாறிக்கொண்டே இருந்த சூழலில், திடீரென அடுத்த சில ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

-Advertisement-

இதிலிருந்து மீள முடியாத பஞ்சாப், 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ஆர்சிபி வெற்றி பெற பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பையும் இழந்தது. இந்த தோல்விக்கு பின்னர் பேசியிருந்த பஞ்சாப் கேப்டன் சாம் கரண், “இந்த சீசன் முழுக்க நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருந்தபோதிலும் அதனை கொண்டு பிளே ஆப் முன்னேற முடியாமல் போனது துரதிஷ்டவசம் தான். மிக சிறப்பான வீரர்களை கொண்டு இருந்தாலும் அணிக்காக வருந்துகிறோம்.

இருந்த போதிலும் தலையை உயர வைத்து இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இன்னும் சிறப்பாக வர வேண்டும். இந்த சீசனில் எங்கள் அணியில் சில சாதனைகளையும் சிறப்பான பேட்டிங்கையும் ஆடி இருந்தோம். இதுபோல ஒரு அணியை தலைமை தாங்கியது பெருமையாக இருந்தது. நிறைய ஏமாற்றங்களும் இருப்பதால் ரசிகர்களை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.

-Advertisement-

சற்று முன்