- Advertisement -
Homeகிரிக்கெட்மும்பைக்கு ஒரு லக்னோ.. பஞ்சாப்பிற்கு ஒரு ஆர்சிபி.. கோலி ஸ்ட்ரைக் ரேட்டில் அடிபணிந்த கிங்ஸ்..

மும்பைக்கு ஒரு லக்னோ.. பஞ்சாப்பிற்கு ஒரு ஆர்சிபி.. கோலி ஸ்ட்ரைக் ரேட்டில் அடிபணிந்த கிங்ஸ்..

-Advertisement-

சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டியில் மோதிய நிலையில் இதில் தோல்வி பெறும் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிடும் என்ற சூழல் இருந்தது. அதே வேளையில், வெற்றி பெறும் அணிக்கு தொடர்ந்து அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

அதன்படி டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர் பாப் டூப்ளசிஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 12 ரன்களில் அவுட்டாகி இருந்தார். ஆனால் மறுபுறம் விராட் கோலி நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடியது மட்டுமில்லாமல் ஆரம்பித்திலிருந்து அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தார்.

இவருடன் கைகோர்த்து ஆடிய ராஜத் படிதர் 23 பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின்னர் வந்த கேமரூன் க்ரீனும் 46 ரன்கள் எடுத்து நல்ல பங்களிப்பை அளித்திருந்தார். 47 பந்துகளில் ஆறு சிக்ஸர் முதல் மற்றும் ஏழு ஃபோர்களுடன் 92 ரன்கள் எடுத்திருந்த கோலி அவுட்டாக கடைசி கட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்களை பெங்களூரு எடுத்திருந்தது.

கடைசி ஓவரை வீசிய பஞ்சாப் வீரர் ஹர்ஷல் படேல் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் ஆறு ரன்களில் அவுட்டாக, மூன்றாவது வீரராக உள்ளே வந்த ரீல்ஸ் ரஸவ், நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு பெங்களூரு அணிக்கு பயம் காட்டி கொண்டிருந்தார்.

-Advertisement-

ஆனால், அவர் 61 ரன்களில் அவுட்டாக வெற்றி பாதை நோக்கி சென்று கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழ தொடங்கியது. இதனால், 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 181 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் வெற்றியை உறுதி செய்த பெங்களூரு அணி, பிளே ஆப் வாய்ப்பை இன்னும் பலப்படுத்தி உள்ளது.

மறுபுறம், ரிலீ ரஸவ் மற்றும் சஷாங்க் சிங் அதிரடி வீணானதுடன் மட்டுமில்லாமல் மீண்டும் ஒரு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் பஞ்சாப் அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்