- Advertisement 3-
Homeவிளையாட்டுஏற்கனவே 3 முறை சொதப்பியாச்சு. இவரை ஆரம்பத்திலேயே தூக்கலனா சிஎஸ்கேவின் நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்....

ஏற்கனவே 3 முறை சொதப்பியாச்சு. இவரை ஆரம்பத்திலேயே தூக்கலனா சிஎஸ்கேவின் நிலமை கொஞ்சம் கஷ்டம் தான். வரலாற்றை மாற்றி அமைக்குமா சிஎஸ்கே?

- Advertisement 1-

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டி ஒருவழியாக குவாலிஃபையர் சுற்றுவரை தற்போது வந்துள்ளது. லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய முதல் இரண்டு அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகியோருக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல பரீட்சை நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலிற்க்கு போகும் வாய்ப்பை பெற போகிறது.

அதே சமயம் இதில் தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று வரும் அணியிடம் மோத வேண்டும். சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை மோதியுள்ளன. ஆனால் அந்த மூன்று முறையும் குஜராத் டைட்டன்ஸ் அணிதான் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சீசனில் இரண்டு முறையும் நடப்பு சீசனில் ஒருமுறையும் என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ். அதனால் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான திட்டம் ஒன்றை தீட்டி அதை செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி பெறுவது சாத்தியம் ஆகும் எனும் சூழல் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் நல்ல பலத்துடன் உள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை முகமது ஷமி, ரஷீத் கான் மற்றும் நூர் அகமது ஆகியோர் மிரட்டலான பார்மில் உள்ளனர். அவர்களை எப்படி சமாளிப்பது என்று சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

- Advertisement 2-

அதே போல குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கில் அச்சுறுத்தும் வீரராக இருக்கிறார் சுப்மன் கில். இந்த சீசனில் 2 சதங்கள் உள்பட 680 ரன்களைக் குவித்துள்ளார் அவர். கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக அசால்ட் சதம் அடித்து எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அவரை பவர் ப்ளேக்குள் அவுட்டாக்க சிஎஸ்கே பவுலர்கள் முயலவேண்டும். அவரைத் தவிர்த்து டேவிட் மில்லர், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் தெவாட்டியா என ஒரு படையே உள்ளது.

இதையும் படிக்கலாமே: மத்த டீம் இத செய்ய மாட்டாங்க. வீரர்கள் சரியா ஆடலனாலும் சிஎஸ்கே-ல இது தான் நடக்கும். மொயின் அலி பேச்சு

சென்னை அணியும் இந்த அணிக்கு நிகரான ஒரு அணிதான் என்றாலும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்ல முடியாத ஒரு அணியாக வலம் வருவதால் சிஎஸ்கே கேப்டன் தோனி என்ன மாதிரியான திட்டத்தை செயல்படுத்தி அந்த அணியை நிலைகுலைய செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சற்று முன்