- Advertisement 3-
Homeவிளையாட்டுதோத்தாலும் அதை நினைச்சு சந்தோசமா இருக்கு.. வேதனையிலும் ஆப்கானிஸ்தான் கேப்டன் சொன்ன விஷயம்

தோத்தாலும் அதை நினைச்சு சந்தோசமா இருக்கு.. வேதனையிலும் ஆப்கானிஸ்தான் கேப்டன் சொன்ன விஷயம்

- Advertisement 1-

இதுதான்டா கிரிக்கெட் என கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஒரு சிறப்பான போட்டி தான் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியை எதிர்த்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை அவர்களை ஒரு கை பார்த்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்திய அணியை எதிர்த்து இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியதுடன் போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்ற ஆப்கானிஸ்தான் அணியை தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அண்ணாந்து பார்த்து வருகின்றனர். 213 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி அவர்கள் ஆடிய போது யாருமே இப்படி ஒரு முடிவை நோக்கி தான் போட்டி செல்கிறது என கருதி இருக்க மாட்டார்கள்.

முன்னதாக 4 விக்கெட்டுகளை 22 ரன்களில் இந்திய அணி இழந்த நிலையில், ரோஹித் சதமடிக்க அவருடன் இணைந்து ரிங்கு சிங்கும் அரை சதம் கடந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 212 ரன்கள் சேர்த்தது. கடின இலக்காக இருந்தும் கூட, இந்திய அணி பீல்டிங்கில் பரபரப்புடன் தான் காணப்பட்டது. அந்த அளவுக்கு ஒரு சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்.

தொடக்க வீரர்கள் இருவரும் ஐம்பது ரன்களை கடக்க, அடுத்து வந்த குல்பதீன் கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் வரை ஆப்கானிஸ்தான் அணி குவிக்க உதவியதால், போட்டி டை ஆனது.

- Advertisement 2-

முதல் சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆக, பின்னர் இரண்டாவது சூப்பர் ஓவரில் ரவி பிஷ்னோய் இரண்டு விக்கெட் எடுத்த பின்னர் தான் இந்திய அணி வெற்றி பெற்று நிம்மதி பெருமூச்சையும் அவர்கள் விட்டிருப்பார்கள் என தெரிகிறது. ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு ஒரு ஆட்டம் காட்டி உள்ளது.

இந்த நிலையில், தோல்விக்கு பின்னர் பேசி இருந்த அந்த அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரன், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எங்களின் ஒட்டுமொத்த திறனை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடரில் எங்கள் அணியில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்துள்ளது. அணைத்து வீரர்களுமே சிறந்த பங்களிப்பை இந்த தொடரில் அளித்திருந்தனர். இந்தியாவுக்கு எதிராக இதற்கு முன்பு இப்படி ஒரு கிரிக்கெட்டை நாங்கள் ஆடியதே இல்லை. பேட்டிங்கில் இந்த தொடர் முழுக்க சிறப்பாக செயல்பட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்