- Advertisement 3-
Homeவிளையாட்டுஆரம்பமே சரியில்லையே.. முதல் போட்டியிலேயே வந்த தலைவலி.. ஏமாந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

ஆரம்பமே சரியில்லையே.. முதல் போட்டியிலேயே வந்த தலைவலி.. ஏமாந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

- Advertisement 1-

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், அதிகம் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி களமிறங்கி அசத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இங்கே 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி ஆட உள்ளது. இதனிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறுபக்கம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் இந்த டி 20 தொடரிலும் பங்கேற்கவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு ரோஹித் மற்றும் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் எந்த டி 20 தொடரிலும் பங்கேற்கவில்லை. 2024 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், அவர்களை புறக்கணித்து இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டம் போட்டுள்ளதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

மேலும் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் கவனம் செலுத்த போவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இவை அனைத்தும் பிசிசிஐ தரப்பில் மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், டி 20 உலக கோப்பையை பற்றி பேச இன்னும் நேரம் இருக்கிறது என்றும் அதற்கான நேரம் வரும் போது முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா கூறி இருந்தார்.

- Advertisement 2-

அதே போல, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கு கே எல் ராகுலும், டெஸ்ட் தொடருக்கு ரோஹித்தும் என மூன்று வடிவிலான போட்டி தொடருக்கு 3 கேப்டன்களையும் பிசிசிஐ நியமித்திருந்தது. இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதுவதாக இருந்த டி 20 தொடரின் முதல் போட்டி தற்போது மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மழையின் காரணமாக, டாஸ் போடவும் தாமதமானது. லேசாக மழை இருந்து வந்ததையடுத்து சுமார் 2 மணி நேரமாக தொடர்ந்து மழையின் தூறலும் இருந்தது. இதனால், ஒரு பந்து கூட வீசாமல் போட்டி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி, நாளை மறுநாள் (12.12.2023) gqeberha மைதானத்தில் நடைபெற உள்ளது.

சற்று முன்