- Advertisement -
Homeகிரிக்கெட்சும்மா சும்மா எங்களை நோண்டக்கூடாது.. பழிக்குப்பழி வாங்கிய சூர்யகுமார் அண்ட் கோ.. பொட்டி பாம்பாக அடங்கிய...

சும்மா சும்மா எங்களை நோண்டக்கூடாது.. பழிக்குப்பழி வாங்கிய சூர்யகுமார் அண்ட் கோ.. பொட்டி பாம்பாக அடங்கிய தெ.ஆ அணி…

-Advertisement-

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் முடிவுக்கு வந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் உதவியுடன் நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.

ஆனால், இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தியதுடன் வெற்றி இலக்கையும் எளிதாக எட்டிப் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியிலும் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்திருந்தார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்ட, அவருக்கு பின் வந்த இளம் வீரர் திலக் வர்மா, முதல் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகினார்.

ஆனால், அதன் பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்தனர். கடந்த போட்டியில், டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இந்த முறை அசத்தலாக ஆடி அரைச் சதமடித்திருந்தார். 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், ஷம்சி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

-Advertisement-

மறுபக்கம், நிதானமாக பேட்டிங்கைத் தொடங்கிய கேப்டன் சூர்யகுமார், பின்னர் வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர்கள் பறந்து கொண்டே இருக்க, டி 20 போட்டியில் தனது 4 வது சதத்தையும் பதிவு செய்தார் சூர்யகுமார். ஆனால், சதமடித்து சாதனை புரிந்த அடுத்த பந்திலேயே வில்லியம்ஸ் பந்தில் அவுட்டாகினார். ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் உதவியால் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய தென்னாபிரிக்க அணி, 2 வது போட்டியை போல ஆதிக்கம் செலுத்த முடியாமல் இந்த முறை இந்திய அணியின் பந்து வீச்சுக்கு கட்டுப்பட்டு போனது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்கவும் தடுமாறியது.

அதிலும் குறிப்பாக, குல்தீப் யாதவ் சூழலில் சிக்கி சின்னாபின்னமானது தென்னாப்பிரிக்க அணி. அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற தனது பிறந்தநாளில் இந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். வெறும் 95 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டாக, இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

கடந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதற்கு பழி வாங்கியதுடன் தற்போது தொடரையும் சமன் செய்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்து மோதவுள்ள ஒரு நாள் தொடர், டிசம்பர் 17 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.

-Advertisement-

சற்று முன்