- Advertisement -
Homeகிரிக்கெட்சூர்யகுமார் யாதவை அவுட் எடுக்க இதான் ஒரே வழி.. பந்து வீச்சாளர்களுக்கு ஐடியா கொடுத்த முன்னாள்...

சூர்யகுமார் யாதவை அவுட் எடுக்க இதான் ஒரே வழி.. பந்து வீச்சாளர்களுக்கு ஐடியா கொடுத்த முன்னாள் இந்திய வீரர்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கிரிக்கெட் அரங்கில் அதிக கவனம் பெற்றவர் சூர்யகுமார் யாதவ். இதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இணைந்த போது அவரது பேட்டிங் இன்னும் வலுப்பெற்றது. யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத பல கிரிக்கெட் ஷாட்களை பவுண்டரிகளாக அவர் பறக்க விட, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மெய்மறந்து அவரது திறனை பார்த்தனர்.

ஆனால், அப்படி அவர் சிறப்பாக ஆடிய போதும் உடனடியாக சர்வதேச அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் பொறுமையாக அந்த வாய்ப்பு கிடைக்க அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டார் சூர்யகுமார். அதிலும் குறிப்பாக சர்வதேச டி 20 போட்டிகளில் நம்பர் 1 வீரராக உள்ள சூர்யகுமார் யாதவ், ஜெட் வேகத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியும் வருகிறார்.

குறைந்த பந்துகளை சந்தித்து டி 20 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த வீரர், அதிக சதங்கள், அதிக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் பட்டியலில் முன்னேற்றம் என குறைவான போட்டிகளில் அதிகம் வென்று கோலி, ரோஹித் உள்ளிட்ட டி 20 ஜாம்பவான்களுக்கே போட்டியாக விளங்கி வருகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடரை சூர்யகுமார் தலைமையில் சந்தித்த இந்திய அணி அதில் வெற்றி கண்டது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. இதில் நடந்த இரண்டு போட்டிகளிலும் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், தனது 4 வது டி 20 சதத்தையும் அடித்திருந்தார். அது மட்டுமில்லாமல், தொடர் நாயகன் விருதினையும் அவர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

டி 20 போட்டியில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தி வரும் சூர்யகுமார் யாதவை எப்படி அவுட் எடுக்கலாம் என்பது பற்றி, பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஆலோசனை ஒன்றை கூறி உள்ளார்.

“மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்தை அடிக்கும் வல்லமை சூர்யகுமாரிடம் இருப்பதால் அவருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் பந்து வீச்சாளர்கள் தடுமாறி போகிறார்கள். ஆனால், பிட்ச்சின் ஒரு பக்கமாக நீங்கள் பந்து வீசும் பட்சத்தில் டி 20 போட்டிகளில் அவரை அவுட் எடுக்க நல்ல வாய்ப்பு அமையலாம்.

இருந்த போதிலும் லாங் ஆன், கவர்ஸ், மிட் விக்கெட் உள்ளிட்ட திசைகளில் அவர் அடிப்பதால் விக்கெட் எடுக்கவும் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால், அவரை அவுட் எடுக்கும் எண்ணத்தில் பந்து வீசக்கூடியவர்கள், அந்த திட்டத்தை நீங்களே தான் உருவாக்கி கொள்ள வேண்டும். சிறந்த பந்துகளை தேர்வு செய்து அதை செயல்படுத்தி அவரை அவுட் எடுப்பது தான் ஒரே வழி” என ஜாகீர் கான் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்