- Advertisement 3-
Homeவிளையாட்டுஇங்கிலாந்து அணியின் கதையை முடிக்க ரோஹித் சொன்ன மந்திரம்.. உண்மையை உடைத்த ஜெய்ஸ்வால்..

இங்கிலாந்து அணியின் கதையை முடிக்க ரோஹித் சொன்ன மந்திரம்.. உண்மையை உடைத்த ஜெய்ஸ்வால்..

- Advertisement 1-

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான போதிலும் தனியொரு ஆளாக பட்டையை கிளப்பி உள்ளார் ஜெய்ஸ்வால். டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த கில் மீண்டும் ஒரு முறை அரைசதத்தை தொடாமல் 34 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார். அவரை போலவே ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் அவுட்டாக, முதல் டெஸ்டில் களமிறங்கிய ராஜத் படிதார் சிறப்பாக ஆடி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தார்.

இதன் பின்னர் மீண்டும் விக்கெட்டுகள் போக, முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. மற்ற எந்த வீரரும் 35 ரன்களைத் தாண்டாமல் அவுட்டான போதிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், மிக சிறப்பாக ஆடி 100, 150 ரன்கள் என கடந்து அசத்தி இருந்தார். மேலும், 179 ரன்களுடன் அவுட்டாகாமல் அவர் களத்தில் நிற்பதால் இரண்டாம் நாளில் 200 ரன்களை கடப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே வேளையில், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சை போல இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை சந்திக்காமல் இல்லை. இந்த நிலையில், முதல் நாள் முடிவுக்கு பின்னர் ஜெய்ஸ்வால் பேசிய விஷயங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

- Advertisement 2-

“ஒவ்வொரு செஷனாக நான் விளையாட நினைத்தேன். இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பந்து வீசும் போது அந்த சிறந்த ஸ்பெல்களை நான் கடக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் பிட்ச் சற்று ஈரமாக இருந்தது. அங்கே சுழலும், பவுன்சும் அதிகமாக இருக்க வேகப்பந்து குறைவாக இருந்தது. நான் அந்த லூஸ் பந்துகளை அடித்து ரன் சேர்க்க விரும்பினேன்.

இதனை இன்னும் இரட்டிப்பாக மாற்றி நான் அணிக்காக இறுதி வரை ஆட விரும்புகிறேன். இப்போதுள்ள நிலைமையில் இருந்து இன்னும் சிறப்பாக ஆடி இந்திய அணியை மீட்டெடுக்க வேண்டும். பந்து பழையதான பிறகு பவுன்சும் அதிகமாக இருந்தது. ராகுல் டிராவிட்டும், ரோஹித் ஷர்மாவும் சேர்ந்து எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தார்கள்.

அது மட்டுமில்லாமல் இந்த இன்னிங்ஸை இன்னும் ஒரு பெரிய இன்னிங்சாக மாற்றி கடைசி வரை நிற்க வேண்டும் என்றும் என்னிடம் அறிவுறுத்தினார்கள்” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

சற்று முன்