- Advertisement 3-
Homeவிளையாட்டுயாருப்பா இந்த 22 வயசு பையன்.. லக்னோ ஆட்டத்தை அடக்கிய ஆஸி. வீரர்.. அடிச்ச சிக்ஸ்...

யாருப்பா இந்த 22 வயசு பையன்.. லக்னோ ஆட்டத்தை அடக்கிய ஆஸி. வீரர்.. அடிச்ச சிக்ஸ் எவ்ளோ தெரியுமா?..

- Advertisement 1-

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளிடையே மிக அட்டகாசமாக போட்டி நடைபெற்று இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகளும் ஐபிஎல் தொடரில் மோதி இருந்தது. இதில் டெல்லி அணிகள் 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலும் கடைசி இடத்தில் இருந்த நிலையில், மறுபுறம் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் இருந்து சிறப்பாக விளங்கி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த அதன்படி ஆடிய அந்த அணியில் டி காக் 19 ரன்களிலும், பின்னர் வந்த படிக்கல் மூன்று ரன்களிலும், தொடர்ந்து ஸ்டாய்னிஸ் எட்டு ரன்களிலும் அனைத்து போட்டிகளிலும் நல்ல பங்களிப்பை அளித்த நிக்கோலஸ் பூரன் முதல் பந்தில் கோல்டன் டக்காகியும் வெளியேறி இருந்தார். அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தவித்த லக்னோ அணியை நிலைகுலைய வைக்க முக்கிய காரணமாக இருந்தவர் டெல்லி வீரர் குல்தீப் யாதவ்.

இவர் நான்கு ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகள் விழவும் காரணமாக இருந்தார். இதனால் 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 130 ரன்கள் வரை தான் அவர்கள் சேர்ப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு பாட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.

இளம் வீரர் பதோனி, 35 பந்துகளில் நான்கு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்திலும் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய அர்ஷத் கான் 20 ரன்கள் எடுக்க, இருவரும் இணைந்து 8 வது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தனர்.

- Advertisement 2-

இதனால் லக்னோ அணி, 167 ரன்கள் எடுக்க தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பவர் பிளே முடிவில் வார்னர் விக்கெட்டை மட்டும் இழந்து 62 ரன்கள் எடுத்து பலமாகவும் இருந்தது. இதன் பின்னர், ப்ரித்வி ஷா 32 ரன்களில் அவுட்டாக, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர், அறிமுக ஐபிஎல் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவருடன் இணைந்து ஆடிய ரிஷப் பந்த், 41 ரன்களிலும் அவுட்டாக, 16 ஓவர்களில் அவர்கள் 150 ரன்களையும் தொட்டிருந்தனர்.

19 வது ஓவரில் இலக்கையும் எட்டிப்பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த தொடரில் தங்களின் 2 வது வெற்றியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பதிவு செய்துள்ளது. மறுபுறம் லக்னோ அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்