- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன்ன தோக்கடிச்ச அவரை சும்மா விடமாட்டேன்.. பும்ராவுக்கு சவால் விட்ட ஜோ ரூட்..

என்ன தோக்கடிச்ச அவரை சும்மா விடமாட்டேன்.. பும்ராவுக்கு சவால் விட்ட ஜோ ரூட்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முதல் இரண்டு நாட்களில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த அதே வேளையில் மூன்றாவது நாள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தன் பக்கம் மாற்றி எழுதியிருந்தார் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்.

இதனால் இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள ஒரு சூழலில் வெற்றி யாருக்கு என்பதே தற்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் உள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்திருந்தது.

190 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி விளங்கியதால் நிச்சயம் சுழற்பந்து வீச்சால் இங்கிலாந்து விக்கெட்டுகளை காலி செய்து விடுவார்கள் என்று தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஒல்லி போப் மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் இங்கிலாந்து அணியும் 126 ரன்கள் வரைக்கும் தற்போது முன்னிலை வகித்துள்ளது.

போப் 148 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் நிற்பதால் மீதமுள்ள நாலு விக்கெட் இருக்கும் சூழலில், இன்னும் ஒரு நூறு ரன்களுக்கு மேல் சேர்த்து விடுவார்கள் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் சுமார் 200 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தால் நிச்சயம் அது அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் நெருக்கடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

இதனால் இந்த போட்டியின் மிக முக்கியமான நாளாக நான்காவது நாளும் அமைந்துள்ள சூழலில் இந்தியா வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரரான ஜோ ரூட் சில கருத்துக்களை தற்போது தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் பும்ரா விக்கெட்டை ஜோ ரூட் எடுத்திந்தார். அதேபோல மிக முக்கியமான இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட்டை பும்ரா அவுட் எடுத்திருந்தார். இது பற்றி பேசிய ஜோ ரூட், “இந்த சமயத்தில் நான் களத்தில் இல்லாமல் இருப்பது மிகவும் விரக்தியாக உள்ளது. ஆனால் அதே வேளையில் மிகவும் திறமையும் வேகமும் வாய்ந்த பவுலராக பும்ரா உள்ளார்.

அவரது ஓவரில் அதிக ரன்கள் அடிக்காமல் போனது எனக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தது. இதனால் தொடர்ந்து ஒரு நான்கு முதல் ஐந்து ஓவர்களை எங்களை நோக்கி முழு திறமையுடன் பும்ரா வீசியிருந்தார். இதனால் முதல் டெஸ்டில் 1 – 0 என பும்ரா வெற்றி பெற்றுள்ளார். ஆனால் பும்ராவை முதல் இன்னிங்சில் நான் அவுட் எடுத்ததால், 1 – 1 என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். எனக்கும் பும்ராவுக்கும் உள்ள கடுமையான இந்த போட்டி தொடர் முழுக்க தொடரும் என்றும் நம்புகிறேன்” என ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்