- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ரா, சிராஜ் ஓவரை பொளக்க.. ஜோ ரூட் எடுத்த புது டெக்னிக்.. அப்போ கன்ஃபார்ம் சம்பவம்...

பும்ரா, சிராஜ் ஓவரை பொளக்க.. ஜோ ரூட் எடுத்த புது டெக்னிக்.. அப்போ கன்ஃபார்ம் சம்பவம் தான்..

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிராக தங்கள் மோத உள்ள டெஸ்ட் தொடரில் அவர்களின் ஒரே இலக்கு இந்திய மண்ணில் எப்படியாவது அவர்களை வீழ்த்தி தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும் தான் இங்கிலாந்து அணியின் இலக்காக உள்ளது. பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே மிகவும் நிதானமாக பந்துகளை அதிகமாக எடுத்து விக்கெட்டுகள் விழாமல் ரன்கள் சேர்ப்பும் பாணியைத் தான் அனைத்து அணிகளும் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக, டெஸ்ட் போட்டிகளில் டி 20 போட்டிகளை போல அதிரடியாக ஆடும் ஆட்டத்தை கையில் எடுத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. முதல் பந்து முதலே ஒரு நாள் போட்டி, டி20 போட்டி என கலந்து அடித்து ஆடி சீக்கிரமே ரன் சேர்த்து விட்டு எதிரணியை பேட்டிங் வரச் செய்து விக்கெட்டுகளை எடுத்து குறைந்த நேரத்தில் போட்டியை முடித்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் அவர்கள் இந்த மாதிரி ஆடி வருவதாகவும் தெரிகிறது.

அப்படி இருக்கையில், அவர்களின் அதிரடி ஆட்டமான பேஸ் பால் திட்டம் இந்திய மண்ணில் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் பலரும் அதிகமாக இந்தியாவின் பக்கமே ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அதனை மாற்றி எழுதும் முயற்சியில் தான் இங்கிலாந்து அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் கூட தனது அதிரடி பாணியில் இந்திய அணியை அவர்களின் மண்ணில் வீழ்த்தும் முயற்சிகளை தான் திட்டம் போட்டு வகுத்து செயல்படுத்த முயற்சி செய்ய உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

- Advertisement 2-

இதற்கிடையே இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சிராஜ் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை சமாளிக்க தற்போது வலை பயிற்சியில் ஒரு யுக்தியை கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுவாக இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது குளிர்காலமாக இருப்பதால் முதல் செஷனில் இருந்தே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்துகளை சிறந்த முறையில் இந்திய மண்ணில் எதிர்கொள்வதற்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை அதிகமாக சந்தித்து பயிற்சியில் ஜோ ரூட் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அனைவருமே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு தான் அவர்களுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும் என தெரிவித்து வரும் சூழலில், ஜோ ரூட்டின் திட்டம் பலரையும் அசர வைத்துள்ளது. அவர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருவது தொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக ஜோ ரூட் விளங்குவாரா என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

சற்று முன்