- Advertisement 3-
Homeவிளையாட்டுபெங்களூர் அணிய விட்டு கிளம்புங்க கோலி. இந்த டீம்ல போய் சேந்துக்கோங்க - சூட்டோடு சூட்டாக...

பெங்களூர் அணிய விட்டு கிளம்புங்க கோலி. இந்த டீம்ல போய் சேந்துக்கோங்க – சூட்டோடு சூட்டாக கெவின் பீட்டர்சன் போட்ட ட்வீட்

- Advertisement 1-

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை விராட் கோலி கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாதவராகவே இருந்து வருகிறார். இதுவரை 15 சீசன்கள் ஐபிஎல் விளையாடியும் அவர் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் அந்த அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. இந்த அணியை சில சீசன்கள் கேப்டனாகவும் வழிநடத்தி சென்றுள்ளார் கோலி.

இதுவரை பெங்களூர் அணி 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி மூன்றிலும் தோற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு என மூன்று முறை வெவ்வேறு அணிகளோடு பைனல்ஸ் விளையாடிய ஆர்சிபி மூன்று முறையும் துரதிர்ஷ்டவசமாக தோற்றுள்ளது.

இதுமட்டும் இல்லாமல் பலமுறை ப்ளே ஆஃப் வரை சென்று தோற்று வெளியேறியுள்ளது. இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி ப்ளே ஆஃப்க்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இத்தனைக்கும் அணிக்காக கோலி, கடைசி இரண்டு போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிபி அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் கூட தனது பேச்சில் கோலியின் அர்ப்பணிப்பையும் ஆட்டத்தையும் குறித்து வெகுவாக பாராட்டி பேசி இருந்தார். அதே சமயம் ரசிபி அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடதாததே அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சோகமான முடிவுக்குப் பின்னர் பலரும் கோலிக்கு ஆறுதலும், அறிவுரைகளும் வழங்கியுள்ளனர்.

- Advertisement 2-

அந்தவகையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் வைத்துள்ள கோரிக்கை ரசிகர்கள் இடையே பரவலாக கவனம் பெற்றுள்ளது. அவர் தன்னுடைட டிவிட்டர் பக்கத்தில் “கோலி, ஆர்சிபி அணியில் இருந்து விலகி தலைநகர அணிக்கு (டெல்லி கேப்பிடல்ஸ்) விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே-ல எனக்கு கிடைத்த மரியாதை இது தான். தோனி கூட விளையாடறது என்னக்கு ஒன்னும் புதுசு இல்ல. சிஎஸ்கே அனுபவம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்

கோலி இதுவரை தன்னுடைய 15 சீசன்களையும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். இது ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரருக்கும் இல்லாத பெருமையாகும். கடைசி வரை பெங்களூர் அணிக்காக மட்டும்தான் விளையாடுவேன் என்றும் கோலி ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீட்டர்சனின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சற்று முன்