- Advertisement 3-
Homeவிளையாட்டுஇத செஞ்சா அவரு ஓவர்ல ஈஸியா சிக்ஸ் அடிக்கலாம்.. திட்டம் போட்டு அஸ்வின் கதையை முடித்த...

இத செஞ்சா அவரு ஓவர்ல ஈஸியா சிக்ஸ் அடிக்கலாம்.. திட்டம் போட்டு அஸ்வின் கதையை முடித்த பீட்டர்சன்

- Advertisement 1-

ரஞ்சி தொடர், U 19 உலக கோப்பை, SA டி 20 லீக் உள்ளிட்ட பல தொடர்கள் கிரிக்கெட் அரங்கில் பரபரப்பாக நடந்து வரும் அதே வேளையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு தொடர் என்றால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் மீது தான்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமாகி மார்ச் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக இருக்கும் நிலையில், அவர்கள் நிச்சயம் இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் தான் முட்டி மோதிக் கொள்வார்கள் என தெரிகிறது.

அதிலும் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் நடைபெறுவது உள்ளிட்ட பல சாதகங்கள் இருப்பதால் அவர்கள் இங்கிலாந்து அணியை நிச்சயம் சமாளித்து விடுவார்கள். ஆனால் அதே வேளையில் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியை இந்த முறை எப்படியாவது கட்டுப்படுத்தி தொடரை சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்களையும் போட்டு இங்கிலாந்து அணி தயாராகி வருவதாக தெரிகிறது.

மேலும் இந்திய மண்ணில் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பலரும் பல விதமான ஐடியாக்களையும் இங்கிலாந்து அணிக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், அஸ்வின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி சில ஆலோசனைகளை கொடுத்துள்ளார்.

- Advertisement 2-

சொந்த மண்ணில் போட்டி என வந்தாலே நிச்சயம் அஸ்வின் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து தனது பந்துவீச்சில் விக்கெட்டுகளை காலி செய்து விடுவார். இதனால் அவரது பந்தை மிக கவனமாக ஆட வேண்டியது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மிக முக்கியம்.

இதனிடையே அஸ்வின் பந்துவீச்சை பற்றி சமீபத்தில் பேசிய கெவின் பீட்டர்சன், “நான் அஸ்வினின் தூஸ்ரா பந்துகளை எதிர்த்து ஆடினேன். அவர் ஓடி வரும்போது பந்தை பின்புறத்தில் லோட் செய்வதை பார்த்தேன். இப்போதும் அவர் அப்படி தான் செய்வார் என்று நினைக்கிறேன். ஆஃப் ஸ்பின்னரான அவர் ஓடிவந்து பின்னர் பந்தை தூஸ்ராவாக மாற்றாமல் முன்கூட்டியே அதனை செய்ததால் நூறு சதவீதம் அப்படித்தான் வீசுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

அதனை நான் பயன்படுத்திக் கொண்டு அவரது பந்தை ஆப் சைட் மேலே அடித்தேன். அவரின் தூஸ்ரா பந்துக்கு ஏற்றவாறு லெக் சைடில் ஃபீல்டர்கள் இருந்ததால திரும்பும் பந்தை எல்லாம் சிக்ஸர் அல்லது ஃபோர் அடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால் இந்த தொடரில் இந்திய அணிக்காக நீங்கள் எட்ஜ் கொடுத்தால் பிரச்சனை இல்லை. அதே வேளையில் எல்பிடபிள்யூ அல்லது போல்டு ஆனால் நிச்சயம் உங்களுடைய திட்டங்களில் தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம்” என கெவின் பீட்டர்சன் கூறி உள்ளார்.

சற்று முன்