- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணியில் 12 வருசமா நடக்காத ஒரு விஷயம்.. ரோஹித்துக்கு காத்திருக்கும் பெரிய தலைவலி..

இந்திய அணியில் 12 வருசமா நடக்காத ஒரு விஷயம்.. ரோஹித்துக்கு காத்திருக்கும் பெரிய தலைவலி..

- Advertisement 1-

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுமே தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரை தான் எதிர்நோக்கி காத்து வருகின்றனர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு பெரிய அணிகள் மோதுவதால் அவர்கள் இருவருக்குமே இந்த தொடரை கைப்பற்றுவது மிக முக்கியமான பொருட்டாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அவர்கள் இந்த தொடரில் வென்று தான் ஆக வேண்டும்.

ஒரு பக்கம் பந்து வீச்சில் சொந்த மண்ணில் கலக்கும் இந்திய அணியும், இன்னொரு பக்கம் அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் இங்கிலாந்து அணியும் மல்லுக்கட்ட உள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் பரபரப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐந்து டெஸ்ட் போட்டிகளின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி, திடீரென சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார். இதனை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் உறுதி செய்த சூழலில் அவருக்கு பதிலாக எந்த வீரர் இந்திய அணிக்காக தேர்வாவார் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கோலி முதலில் இரண்டு போட்டியில் இடம் பெறாமல் போனது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு தான். இதற்கிடையே அவருக்கு பதிலாக புஜாரா, ரஹானே, ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களில் யாராவது இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றும் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் கோலி இரண்டு போட்டிகளில் இருந்து விலகியதால் சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் ஒரு விஷயம் நடக்க அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து கோலி, புஜாரா மற்றும் ரஹானே உள்ளிட்டோர் ஆடி வருகின்றனர். இதில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் சில தொடர்களில் சமீபத்தில் இடம்பெறாமல் போனாலும் கோலி தொடர்ந்து ஆடி வந்தார்.

அப்படி இருக்கையில் அவரும் தற்போது விலகி உள்ளதால், புஜாரா, ரஹானே மற்றும் கோலி ஆகிய மூன்று பேருமே இல்லாமல் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆட உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இவர்கள் மூன்று பேரில் ஒருவராவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் மூன்று பேரும் இல்லாமல் சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்போது ஆட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. ஒருவேளை புஜாரா, கோலிக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு அணியில் ஆடும் பட்சத்தில் இந்த விஷயம் நடைபெறாமல் போகவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்