- Advertisement 3-
Homeவிளையாட்டுஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் ஜெயிச்சதும்.. கொல்கத்தா அணி தொட்ட உயரம்.. மும்பை, சிஎஸ்கேவால் கூட முடியாத...

ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் ஜெயிச்சதும்.. கொல்கத்தா அணி தொட்ட உயரம்.. மும்பை, சிஎஸ்கேவால் கூட முடியாத விஷயம்..

- Advertisement 1-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர் முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றிலேயே நடந்த ஒரு மிக முக்கியமான விஷயத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ராஜாக்கள் என்றால் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும் இல்லாமல் ஒரு ஃபைனலை பார்ப்பதே மிக அரிதான நிகழ்வாக ஐபிஎல் தொடரில் இருக்கும் நிலையில் இதுவரை நடந்து முடிந்த 17 ஐபிஎல் சீசன்களில் இரு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

இதில் மும்பை அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியிருந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2021 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடரை சொந்தமாக்கி இருந்தது. இப்படி 17 சீசன்களில் இந்த இரு அணிகளே 10 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் தலா ஒரு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இவர்களை தவிர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகள் சிறப்பாக போராடி இறுதி போட்டிக்கு முன்னேறிய போதிலும் அவர்களால் ஏனோ கோப்பையை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அதிலும் ஆர்சிபி அணி தான் பலமுறை இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்ற தகுதி உள்ள அணிகளில் ஒன்றாக இருந்த போதிலும், நல்ல வீரர்களை கொண்டிருந்த போதிலும் ஏதோ சில தவறுகளால் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.

- Advertisement 2-

இந்த சீசனிலாவது வெல்வார்கள் என எதிர்பார்த்த போது தான் மீண்டும் ஒரு தடங்கல் வர, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய வேகத்தில் வெளியேறி இருந்தனர். லீக் சுற்று முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருந்த ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இறுதிப்போட்டி வரைக்கும் அதனைத் தொடர்ந்து கோப்பையையும் சொந்தமாக்கி உள்ளனர்.

அப்படி இருக்கையில் தான் மற்ற எந்த ஐபிஎல் தொடரிலும் நடக்காத ஒரு அரிய நிகழ்வும் கொல்கத்தா கோப்பையை வென்றதும் நடந்துள்ளதை பற்றி பார்க்க போகிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையும் தோனியின் தலைமையில் தான் வென்றிருந்தது. அதேபோல மும்பை இந்தியன்ஸின் ஐந்து கோப்பைகளும் ரோகித் சர்மா தலைமையில் தான் அரங்கேறி இருந்தது.

இப்படி இரண்டு அணிகளும் ஒரே கேப்டன் தலைமையில் வெல்ல, கொல்கத்தா அணி கம்பீர் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் என இரண்டு கேப்டன்கள் தலைமையில் மூன்று கோப்பையை வென்றுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு கேப்டன்கள் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் கொல்கத்தா அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்