- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் நல்லா பேட்டிங் ஆட அவரு ஒருத்தர் தான் காரணம்.. ரசிகர்களின் குழப்பத்திற்கு விடை சொன்ன...

நான் நல்லா பேட்டிங் ஆட அவரு ஒருத்தர் தான் காரணம்.. ரசிகர்களின் குழப்பத்திற்கு விடை சொன்ன குல்தீப்..

- Advertisement 1-

இங்கிலாந்துக்கு எதிராக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போது அதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் தான் இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும் என்ற நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறிய சமயத்தில் மிக சிறப்பாக தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி இருந்தார் குல்தீப்.

தனது சுழல் பந்தினால் பல்வேறு மேஜிக்கை செய்து அவரை எதிர்கொள்ளும் எதிரணி வீரர்கள் எப்படி இது விக்கெட்டானது என யோசிப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் மிக அற்புதமாக பந்து வீசி வரும் குல்தீப் யாதவ், ஐந்தாவது போட்டியில் 7 விக்கெட் மற்றும் 30 ரன்கள் எடுத்ததன் பெயரில் ஆட்டநாயகன் விருதினையும் வென்று இருந்தார்.

இவரது பந்துவீச்சு பலருக்கு சற்று வியப்பை ஏற்படுத்தாமல் போனாலும் அவரது பேட்டிங் தான் தற்போது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய ஒரு கேள்வியையும், அதே வேளையில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங்கே கிடைக்காமல் இதுவரை ஆடவே வழியில்லாமல் இருந்த குல்தீப்பிற்கு இந்த திறமை எப்படி வந்தது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

அது மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணியில் உள்ள சில முன்னணி பேட்ஸ்மேன்களை விட அதிக பந்துகளை இந்த தொடரில் குல்தீப் யாதவ் சந்தித்துள்ளது ,மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும். இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் தனது பேட்டிங்க்கான ரகசியம் பற்றி குல்தீப் யாதவ் பேசி இருந்தார்.

- Advertisement 2-

“நான் இந்த முறை நன்றாக பந்து வீசி உள்ளதாகவே நினைக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக போட்ட கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. சாக் கிராவ்லி விக்கெட்டை நான் எடுத்திருந்தது மிகவும் பிடித்திருந்தது. பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி யோசிப்பதை விட, எனது பந்தின் லெந்த் உள்ளிட்ட விஷயங்களில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்.

இதே போல நல்ல ரிதத்துடன் எனது பந்தின் வேகமும் எப்படி என்பதை பார்த்து கொள்கிறேன். எனது பேட்டிங் திறன் நன்று மேம்பட்டு வருவதற்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் உதவியாக இருந்தார். பேட்டிங் திறனில் மட்டுமல்ல, அந்த நேரத்தில் நமது மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து ஆடவும் அவர் உதவினார்” என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்