- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ரா, ஷமி எல்லாம் இல்ல... இந்த பவுலர் தான் ரோகித் சர்மாவுக்கு சிறப்பா செய்ய போறாரு...

பும்ரா, ஷமி எல்லாம் இல்ல… இந்த பவுலர் தான் ரோகித் சர்மாவுக்கு சிறப்பா செய்ய போறாரு – முகமது கைஃப் டிக் செய்த வீரர்

- Advertisement 1-

உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5 ஆரம்பித்து நவம்பர் 19 வரை இந்தியாவில் கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8 அன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் தொடங்க இருக்கிறது.

போட்டி அனைத்தும் இந்தியாவில் நடைபெற இருப்பதால் அனைத்து அணியினரின் சுழற் பந்துவீச்சாளர்களின் தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைத்து அணியினரும் தங்களது தலைசிறந்த சூழற்பந்துவீச்சாளரை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரை ஸ்பின் ஆள்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜாவும், அக்சர் படேலும் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மெயின் ஸ்பின்னர் ஆக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் குல்தீப் யாதவ் உலகக் கோப்பைக்கு முன்னோட்டமான ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் குல்தீப் யாதவ் உலகக் கோப்பை போட்டிக்கு சரியான தேர்வாக இருப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது கைப் கூறுகையில்: வரவிருக்கின்ற ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பையில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தருணம் குல்திப் யாதவியன் பௌலிங் ஆகும். அவர் ரோகித் அண்ட் கோவின் சிறந்த தேர்வாக அமைவார்.

- Advertisement 2-

மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபடுவர். ஆனால் குல்தீப் யாதவின் பௌலிங்கில் பந்து பிளைட் மற்றும் டர்ன் ஆகும் காரணத்தால் ரன்கள் குவிப்பது சவாலாக இருக்கும். இது ஒரு சிறந்த கண்டஸ்ட்டாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

குல்தீப் யாதவ் சமீப காலங்களில் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் எக்கனாமி ரேட்டும் கம்மியாக வைத்துள்ளார். எனவே வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் அவர் துருப்பு சீட்டாக இருப்பார் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

சற்று முன்