- Advertisement -
Homeகிரிக்கெட்இந்தியா பேட்டிங் செஞ்சப்போ நாங்க செஞ்ச பெரிய தப்பு.. தோல்விக்கு பின் புலம்பிய தெ.ஆ கேப்டன்...

இந்தியா பேட்டிங் செஞ்சப்போ நாங்க செஞ்ச பெரிய தப்பு.. தோல்விக்கு பின் புலம்பிய தெ.ஆ கேப்டன் மார்க்ரம்

-Advertisement-

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மோதி வந்த டி 20 தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பொதுவாக, இந்திய மண்ணில் சிறப்பாக ஆடும் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாட்டு மண்ணில் ஆட்டம் காணுவார்கள் என்ற ஒரு கூற்று உண்டு. ஆனால், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, கடைசி டி 20 போட்டியில் பட்டையை கிளப்பி இருந்தது.

இரண்டாவது டி 20 போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணி, 3 வது போட்டியில் ரன் சேர்க்கவே முடியாமல் போனது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களை எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 100 ரன்களும், ஜெய்ஸ்வால் 60 ரங்களும் எடுத்ததால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.

அதிரடி வீரர்களை கொண்ட தெ.ஆ அணி, நிச்சயம் இந்திய அணிக்கு போட்டி கொடுத்து ஆடும் என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் விக்கெட்டுகளை இழக்க, குல்தீப் யாதவ் என்ற புயலில் சிக்கி நல்ல ரன்னை கூட தொட முடியாமல் போனது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்க அணி, வெறும் 95 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

தொடரும் 1 – 1 என சமனில் முடிந்ததால், டி 20 தொடருக்கான கோப்பையை இரு அணி கேப்டன்களும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றிருந்தார்.

-Advertisement-

எதிர்பாராத தோல்விக்கு பின்னர் பேசிய தெ.ஆ அணியின் கேப்டன் மார்க்ரம், “200 ரன்களை நோக்கி சேசிங் செய்த விதத்தில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. எட்டக்கூடிய இலக்காக இருந்த அதனை நாங்கள் சேசிங் செய்திருக்க வேண்டும். நாங்கள் ஃபீல்டிங் செய்த போது எந்த பக்கம் வேண்டுமானாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க முடியும் என நினைத்தோம்.

அதனை சிறப்பாக செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எங்கள் அணியில் சில பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளது. அதனை நாங்கள் முன்னெடுத்து செல்ல நினைக்கிறோம். அதே போல, நாங்கள் இன்னும் சரி செய்ய வேண்டிய விஷயங்களும் கொஞ்சம் இருக்கிறது” என மார்க்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்து மோதவுள்ள ஒரு நாள் போட்டி தொடர், டிசம்பர் 17 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

-Advertisement-

சற்று முன்