- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுக்கு எல்லாமா அவுட் கொடுப்பீங்க.. நடுவரிடம் மல்லுகட்டிய பாக். வீரர்.. ஆஸ்திரேலியா ஜெயிக்க நடுவர் தான்...

இதுக்கு எல்லாமா அவுட் கொடுப்பீங்க.. நடுவரிடம் மல்லுகட்டிய பாக். வீரர்.. ஆஸ்திரேலியா ஜெயிக்க நடுவர் தான் காரணமா..

- Advertisement 1-

ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 16 டெஸ்டில் தோல்வி கண்டு திணறி வருகிறது. இந்த ஆண்டு முழுக்க ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக ஆடிவரும் சூழலில் இது அவர்களின் மகுடத்தின் மற்றொரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அவுட்டான விதம் தற்போது பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணி, 16 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியின் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த ஸ்மித் மற்றும் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக ஆட, பாகிஸ்தான் அணிக்கு 318 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானும் மிகச் சிறப்பாக தான் ஆடி இருந்தது. நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று 16 போட்டிகள் தோல்வி அடைந்த கசப்பான ஒரு விஷயத்தை மாற்றும் என்று தான் ரசிகர்கள் கருதினர். 219 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என சிறப்பான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, மேற்கொண்டு 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்திருந்தது.

இதில் ஆறாவது விக்கெட்டாக பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆனது தான் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. ரிஸ்வான் 35 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த போது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையின் மேல் வ்ரிஸ்ட் பேண்டில் பட்டு கீப்பர் கைக்குச் சென்றது. இதற்கு அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்ய களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

- Advertisement 2-

தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்ய, டிஆர்எஸ் முறையில் பார்த்தபோது, அல்ட்ரா எட்ஜில் கையில் பட்டது போல தெரிந்தது. ஆனால் ஹாட் ஸ்பாட்டில் பந்து பட்ட தடம் தெரியாமல் இருந்த நிலையில் பந்து அவரது கையில் இருந்த வ்ரிஸ்ட் பேண்டில் பட்டு தான் சென்றுள்ளது என்பதும் உறுதியானது.

கைக்கு கீழே பந்து பட்ட பிறகும், அல்ட்ரா எட்ஜ் அடிப்படையில் இதற்கு மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்ததால் பெரும் அதிருப்தி அடைந்தார் ரிஸ்வான். இதனால் களத்தில் இருந்த நடுவரிடமே இவர் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட இது பற்றி தற்போது பல கிரிக்கெட் பிரபலங்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்