- Advertisement 3-
Homeவிளையாட்டுசோக்கர்னு ஸ்லெட்ஜிங் பண்ணுங்க.. கோலிய அவுட் பண்ணிடலாம்.. மோசமான ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்..

சோக்கர்னு ஸ்லெட்ஜிங் பண்ணுங்க.. கோலிய அவுட் பண்ணிடலாம்.. மோசமான ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்..

- Advertisement 1-

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், அதன் பின்னர் அவர்கள் ஆடிய அனைத்து தொடர்களிலுமே வெற்றி பெற்றோ அல்லது சமன் செய்தோ தான் வருகிறது. இதே வழியில் தொடர்ந்து ஆடினால் நிச்சயம் டி 20 உலக கோப்பையை இந்த ஆண்டு தட்டித் தூக்கி விடலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றி இருந்த இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை கருத்தில் கொண்டு இரு அணிகளும் இந்த தொடரில் தீவிரமாக தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே அதிக பலத்துடன் விளங்கிவரும் அதே வேளையில் இந்திய அணிக்கு சாதகமான விஷயம் என்றால் இந்தியாவில் வைத்துப் போட்டிகள் நடைபெறுவது தான். இங்கே சுழற்பந்து வீச்சும் இந்திய அணிக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்ற நிலையில், சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்து வரும் இங்கிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை தங்களின் அதிரடி ஆட்டத்தால் எப்படி கையாள வேண்டும் என்பதை கவனித்து அதற்காக அவர்கள் தயாரானால் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி தான் காத்திருக்கிறது.

மேலும் இந்த தொடரில் இரு அணிகளும் எப்படி ஆட வேண்டும் என்பதை பற்றி முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர், விராட் கோலியை எப்படி அவுட் எடுக்கலாம் என்பது பற்றி சில ஆலோசனைகளை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement 2-

“கோலியின் ஈகோவுடன் விளையாடி அவரது மனநிலையை முதலில் நீங்கள் கலைக்க வேண்டும். அதேபோல பைனல் வந்துவிட்டால் நீங்கள் சோக்கர்ஸ் என இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அவரிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையை வென்றுள்ளார்.

இதனால் கோப்பையை வெல்லவில்லை என இந்திய அணி பற்றி ஸ்லெட்ஜிங் செய்தால் கோலியின் மனநிலையை நிச்சயம் நாம் தூண்டி விடலாம்” என கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும் வேளையில் இந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்லி, கோலியை அவுட் எடுக்க முன்னாள் வீரர் சொல்லியுள்ள விஷயம் ஒரு பக்கம் எதிர்மறையான கருத்துக்களையும் சம்பாதித்துள்ளது.

இது போன்ற விஷயங்களை எல்லாம் விராட் கோலி கவனித்து வருவதால் நிச்சயம் எதற்கும் அசையாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று தான் இந்திய ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்