- Advertisement -
Homeகிரிக்கெட்101 மீ சிக்ஸ் மழை.. நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி வசம் இருக்கும் சுவாரஸ்யமான சம்பவம்..

101 மீ சிக்ஸ் மழை.. நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி வசம் இருக்கும் சுவாரஸ்யமான சம்பவம்..

-Advertisement-

மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு பின்னர் தற்போது சிஎஸ்கே மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதியது. போட்டி லக்னோவின் சொந்த மைதானத்தில் நடந்தாலும் முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தான் மைதானத்தில் அதிகம் கூடியிருந்தனர். இதற்கு தோனி என்ற ஒற்றை பெயர் காரணமாக இருக்கும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார்.

அதன்படி ஆடிய சென்னை அணியில் ஆரம்பமே பல்வேறு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ரவீந்திரா கோல்டன் டக்காக, பின்னர் வந்த கேப்டன் ருத்துராஜ் 17 ரன்களில் அவுட் ஆனார். அனைத்து போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்த ஷிவம் துபே, மூன்று ரன்களில் அவுட் ஆகிய நிலையில் தொடக்க வீரர் ரஹானே மற்றும் ஜடேஜாவும் ஓரளவுக்கு அணியை மீட்டெடுத்து இருந்தனர்.

ரஹானே 36 ரன்களில் அவுட்டாக மிடில் ஆர்டரில் களமிறங்கி இருந்த ஜடேஜா, சிறப்பாக அரை சதத்தை கடந்திருந்தார். முதல் பதினைந்து ஓவர்களில் சென்னை அணியால் 105 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் அவர்கள் 150 ரன்களை கடப்பார்களா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அடுத்த ஐந்து ஓவர்களில் சிஎஸ்கே அணி 71 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தது.

அதிலும் குறிப்பாக மொயீன் அலியின் ஹாட்ரிக் சிக்ஸர்களை எடுத்து அவுட்டாக பின்னர் வந்த தோனி 9 பந்துகள் சந்தித்து 28 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று ஃபோர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஒரு சிக்ஸர் அதில் 101 மீட்டர் தூரம் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் மிகச்சிறந்த கேமியோவை வெளிப்படுத்தி வரும் தோனி, லக்னோ அணிக்கு எதிரான போட்டிகளிலும் அதனை செய்யத் தவறவில்லை.

-Advertisement-

இதன் காரணமாக கடைசி 3 ஓவர்களில் 53 ரன்களையும் சிஎஸ்கே அணி சேர்த்திருந்தது. அப்படி இருக்கையில் தான் இந்த சீசனில் தோனியின் இன்னிங்சில் உள்ள ஒரு சில சிறப்பம்சத்தை பற்றி பார்க்கலாம். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த தோனி, அதன்பின்னர் அடுத்து 2 போட்டிகளில் பேட்டிங் இறங்கினாலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

தொடர்ந்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நான்கு பந்துகளை சந்தித்த தோனி, மூன்று சிக்சர்களுடன் 20 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியிலும் 28 ரன்களை ஒன்பது பந்துகளில் சேர்த்திருந்த தோனியை இந்த ஐந்து போட்டியில் எந்த பந்து வீச்சாளருமே விக்கெட் எடுக்கவில்லை. அது மட்டுமில்லாமல் 42 வயதிலும் அவர் அடிக்கும் அசத்தலான ஷாட்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த சீசனில் 20 வது ஓவரில் மட்டும் மொத்தம் 16 பந்துகளை சந்தித்துள்ள தோனி, 6 சிக்ஸர்கள் மற்றும் நான்கு ஃபோர்களுடன் 356 ஸ்ட்ரைக் ரைட்டில் 57 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்