- Advertisement -
Homeகிரிக்கெட்இத்தனை ரன் அடிச்சும் மும்பையால் ஓவர் டேக் செய்ய முடியாத சென்னையின் 14 ஆண்டுகால சாதனை..

இத்தனை ரன் அடிச்சும் மும்பையால் ஓவர் டேக் செய்ய முடியாத சென்னையின் 14 ஆண்டுகால சாதனை..

-Advertisement-

இன்னும் பல ஆண்டுகளுக்கு ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் தொடரில் மோதிய சமீபத்திய போட்டி ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் மறந்துவிட முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த அளவுக்கு ஒரே போட்டியில் ஏராளமான சாதனைகள் மற்றும் புதிய வரலாறுகள் நிகழ்ந்து இனி பல அணிகளால் பல ஆண்டுகளுக்கு இதனை நிச்சயம் தொடவே முடியாது என்று சிறப்பையும் பெற்றுள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 277 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணியும் கடைசி வரை போராடி 246 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த போட்டியில் மொத்தமாக 523 ரன்கள் இரு அணிகளாலும் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இரு அணிகள் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்னாகவும் இந்த போட்டி பதிவானது.

அதே போல நான்கு வீரர்கள் 16, 18, 23 மற்றும் 24 பந்துகளில் அரை சதத்தையும் இந்த ஒரே போட்டியில் அடித்து இருந்தனர். இதே போல அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் ஆகவும் ஹைதராபாத்தின் 277 ரன்கள் பதிவான நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்த சாதனையையும் மும்பை அணி (246 ரன்கள்) எடுத்து படைத்துள்ளது. இதே போல ஒரு ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்கள் (38 சிக்ஸர்கள்) என்ற சிறப்பையும் இந்த போட்டியில் பெற்றுள்ளது.

இப்படி பல சாதனைகள் இந்த ஒரே போட்டியில் நிகழ்ந்துள்ள நிலையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் 14 ஆண்டுகளுக்கு முன் மோதிய போட்டியின் சிறப்பை மும்பை மற்றும் ஹைதராபாத் அணியால் முந்த முடியாமல் போனது பற்றி தற்போது காணலாம்.

-Advertisement-

கடந்த 2010 ஆம் ஆண்டு, சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், மொத்தமாக 33 சிக்ஸர்கள் மற்றும் 36 ஃபோர்களுடன் 69 பவுண்டரிகள் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில், அந்த சிக்ஸர் சாதனையை உடைத்து 38 சிக்ஸர்களை அடித்திருந்தாலும், மொத்த பவுண்டரிகள் கணக்கு 69 தான் (31 ஃபோர்கள்).

ஒரே போட்டியில் பல இமாலய ஐபிஎல் மற்றும் இமாலய சாதனைகள் உடைந்து போனாலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியின் பவுண்டரிகள் கணக்கை இந்த போட்டியில் சமன் மட்டுமே செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்