- Advertisement -
Homeகிரிக்கெட்98 ரன்னில் ருத்துராஜ் அவுட்டானதும் முதல் முறையா நடந்த அற்புதம்.. அந்த 2 ரன் தான்...

98 ரன்னில் ருத்துராஜ் அவுட்டானதும் முதல் முறையா நடந்த அற்புதம்.. அந்த 2 ரன் தான் எல்லாத்துக்கும் காரணம்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் கடந்த சில தினங்களாகவே அடித்தால் 200, இல்லை என்றால் தோல்வி அடைகிறோம் என்ற அளவிற்கு தான் அனைத்து அணிகளும் ஆடி வருகின்றனர். ஒரு சில இன்னிங்ஸ்களைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அனைத்து அணிகளுமே 200 அல்லது 200 ரன்களுக்கு மேல் தாண்டி இருந்த நிலையில் சமீபத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் கூட இரு அணிகளும் 200 -ஐ கடந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 212 எண்களை எடுத்திருந்தது. இப்படி எந்த போட்டியை எடுத்துக் கொண்டாலும் அதிரடி, அதிரடி என்ற ஒரே வார்த்தை தான் அனைத்து அணிகளிலும் உள்ள பேட்ஸ்மேன்களின் மந்திரமாக கொண்டு பயணித்தும் வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், இந்த சீசனில் மொத்தம் 11 சதங்கள் இதுவரை அடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் 2 சதங்களை அடித்துள்ளார். இவரை தொடர்ந்து விராட் கோலி, ருத்துராஜ், ரோஹித் ஷர்மா, ஹெட், வில் ஜேக்ஸ் உள்ளிட்ட பல வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இந்த சீசனில் நியமிக்கப்பட்டிருந்த ருத்துராஜ், ஒரு போட்டியில் 108 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை இரண்டு ரன்களில் தவற விட்டிருந்தார்.

-Advertisement-

கடந்த சில போட்டிகளாகவே சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் ருத்துராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பெரிய பங்கை வகித்து வருகின்றனர். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கூட இந்த இரண்டு பேரும் ரன் சேர்த்து வரும் சூழலில், தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கூட தொடக்க வீரர் ருத்துராஜ் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். நூலிழையில் தனது இரண்டாவது சதத்தை இந்த சீசனில் அடிக்கும் வாய்ப்பையும் அவர் தவற விட்டிருந்த நிலையில் தான் இதுவரை நடக்காத ஒரு அற்புதமும் முதல் முறையாக இந்த தொடரில் நடந்துள்ளது.

அதாவது 90 ரன்களுக்கு மேல் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒருவர் அடித்தும் சதம் அடிக்காமல் அவுட் ஆனது இதுதான் முதல் முறை. மற்ற 11 முறையும் ஒரு வீரர் 90 ரன்களுக்கு மேல் கடந்திருந்த போது சதங்களை கடந்து தான் அவுட்டாகி இருந்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முதல் முறையாக ருத்துராஜ் தற்போது தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்