- Advertisement -
Homeகிரிக்கெட்என் ஸ்ட்ரைக் ரேட் பத்தி பேசுற ஆளுங்களுக்கு.. 15 வருசமா இதை தான் பண்றேன்.. பதிலடி...

என் ஸ்ட்ரைக் ரேட் பத்தி பேசுற ஆளுங்களுக்கு.. 15 வருசமா இதை தான் பண்றேன்.. பதிலடி கொடுத்த கோலி..

-Advertisement-

குஜராத் அணி நிர்ணயித்த 200 ரன்களை நோக்கி ஆடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 16 ஓவரில் இலக்கை எட்டி சாதனை புரிந்திருந்தது. பாப் டு பிளெஸ்ஸிஸ் 24 ரன்களில் அவுட்டாக, பின்னர் வந்த வில் ஜேக்ஸ், ஆரம்பத்தில் பொறுமையான அதிரடியை தான் கையில் எடுத்திருந்தார். முதல் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த ஜேக்ஸ், அடுத்த 12 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

அதிலும், 15 மற்றும் 16 வது ஓவர்களில் 58 ரன்களை பெங்களூரு அணி சேர்க்க, அவர்களின் வெற்றியும் எளிதாக அமைந்திருந்தது. இதனால், 24 பந்துகள் மீதம் வைத்து பெங்களூரு அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 2 வது வெற்றியை ருசித்துள்ளது. பிளே ஆப் அவர்களுக்கு கொஞ்சம் இக்கட்டான நிலையில் இருந்தாலும், தாங்கள் வெற்றி பெற்று மற்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்புக்கும் சவாலாக ஆர்சிபி விளங்கி வருகிறது. மேலும் இந்த போட்டியில் 70 ரன்கள் சேர்ந்திருந்த கோலி, இந்த சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

வெற்றிக்கு பின்னர் பேசியிருந்த கோலி, “ஜேக்ஸ் பேட்டிங் செய்ய வந்த சமயத்தில் நினைத்த இடத்தில் பந்துகளை அடிக்க முடியவில்லை என எரிச்சல் அடைந்தார். ஆனால் மிடில் ஓவர்களில் நாங்கள் பேசும் போது முடிந்தவரை நிலைத்து நின்று ஆட வேண்டுமென நினைத்திருந்தோம். ஏனென்றால், வில் ஜேக்ஸ் எப்படி ஆக்ரோஷமாக ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மோஹித் ஓவரை அடித்ததும் எனது ரோல் அப்படியே மாறிவிட்டது. நான் அவரது ஆட்டத்தை மறுபக்கம் நின்று பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஏனென்றால், 19 வது ஓவரில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைத்தோம். ஆனால், 16 ஓவரில் முடித்தது உண்மையில் அபாரமான செயல் தான். இது டி 20 போட்டிகளில் மிக சிறந்த சதம் என நான் சொல்வேன். இன்று பிட்ச்சும் நன்றாக இருந்தது. குஜராத் அணியின் இரண்டாம் பாதியில் இருந்து பேட்டிங் சாதகம் அதிகமாக இருந்தது. அதனால் தான் இரு அணிகளும் முதலில் பந்து வீச விரும்பினார்கள்.

-Advertisement-

தேவைப்படும் நேரத்தில் எல்லாம் நான் பவுண்டரிகள் அடித்து எனது பேட்டிங்கை ரசித்தபடி இருந்தேன். எனது ஸ்ட்ரைக் ரேட் பற்றியும், நான் சுழற்பந்துக்கு எதிராக ஆடமாட்டேன் என்றும் கூறுகிறார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரையில் அணிக்காக வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். கடந்த 15 ஆண்டுகளாக அதை தான் செய்து வருகிறேன்.

போட்டியில் என்ன நடக்கிறது என்பதை வெளியே இருந்து பார்த்தபடி சொல்வது என்ன என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. முதல் பாதியை போல இல்லாமல் இப்பொழுது நன்றாக ஆடி வருகிறோம். வெளியே இருந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை பேசுவதை விட உள்ளே இருக்கும் எங்களுக்கு தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

கடந்த இரண்டு போட்டிகளின் ஆட்டத்தை இனியும் தொடர விரும்புகிறோம். நாங்கள் எங்கள் அணிக்காகவும், எங்களின் ரசிகர்களுக்காகவும் தான் ஆடுகிறோம்” என கோலி கூறினார்.

-Advertisement-

சற்று முன்