- Advertisement 3-
Homeவிளையாட்டு12 வருசமா இந்திய அணி கட்டிக் காத்த விஷயம்.. ஒரே நாளில் காலி செய்த இங்கிலாந்து...

12 வருசமா இந்திய அணி கட்டிக் காத்த விஷயம்.. ஒரே நாளில் காலி செய்த இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்..

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அதிக தடுமாற்றம் கண்டதுடன் 246 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடி இருந்த இந்திய அணியும் 400 ரன்களுக்கு மேல் குவிக்க, அவர்கள் அசால்ட்டாக இங்கிலாந்து அணியின் கதையை முதல் டெஸ்டில் முடித்து விடுவார்கள் என்று தான் அனைவருமே கருதி இருப்பார்கள்.

ஆனால், இந்த போட்டியின் 3 வது நாளில் நடந்த கதையே வேறு. பொதுவாக இந்திய மைதானங்களில் ஆட வரும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் முதல் இன்னிங்சில் சதமடிப்பதே மிக பெரிய சவாலாக தான் இருக்கும். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு பிட்ச் சாதகமாக இருந்தாலும் பின்னர் நேரம் செல்ல செல்ல, சுழற்பந்து வீச்சின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.

அப்படி வந்து விட்டால், இந்திய மைதானங்களில் ராஜாக்களாக திகழும் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டம் கட்டி காலி செய்து விடுவார்கள். இந்திய மண்ணில் கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இது தான் நிலைமையாக இருந்து வருகிறது.

அந்த அளவுக்கு இந்திய அணியின் சுழற்பந்து தாக்குதல் அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இப்படி பல அம்சங்கள் இந்திய அணிக்கு சாதகமாக இருந்த போதிலும் அதனை சவாலாக எடுத்துக் கொண்டு சம்பவம் செய்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஒல்லி போப். முதல் இன்னிங்சில் வெறும் 1 ரன் எடுத்து அவுட்டான போப், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்தார்.

- Advertisement 2-

அனைத்து பந்து வீச்சாளர்களையும் புரட்டி எடுத்த ஒல்லி போப், பென் போக்ஸுடன் இணைந்து அபார பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் அணியையும் ஆபத்தில் இருந்து மீட்டார். 3 ஆம் நாள் முடிவில் அவுட்டாகாமல் களத்தில் உள்ள போப், 148 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்த தனி ஒருவன் காரணமாக இங்கிலாந்து அணியும் 126 ரன்கள் முன்னனிலை பெற்றுள்ளது.

இன்னும் ஒரு 100 ரன்களுக்கு மேல், இங்கிலாந்து அணி சேர்த்து விட்டால் நிச்சயம் ஓரளவுக்கு கடினமான ஸ்கோரை கூட இந்திய அணிக்கு இலக்காக அவர்களால் நிர்ணயிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனது சதத்தை கடந்த ஒல்லி போப், இந்திய மண்ணில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்திய மண்ணில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து வீரர் அலைஸ்டர் குக் 176 ரன்கள் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு வீரர், இந்திய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஒல்லி போப்.

சற்று முன்