- Advertisement 3-
Homeவிளையாட்டுவேர்ல்டு கப்ல ஜடேஜா வேணாம்.. அக்சர் படேல் போதும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன கருத்து..

வேர்ல்டு கப்ல ஜடேஜா வேணாம்.. அக்சர் படேல் போதும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன கருத்து..

- Advertisement 1-

இந்திய அணியில் தற்போது தொடர்ந்து பல வீரர்கள் இடம் பிடித்து வருவதால் ஒவ்வொரு தொடரிலும் அணியில் ஏதேனும் மாற்றங்கள் உருவாகித்தான் வருகிறது. கடந்த உலக கோப்பை முடிந்ததும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்கள் பலரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் அதிகம் ஆடவில்லை.

அதேபோல தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடி இருந்த வீரர்கள் சிலர் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரிலும் இதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் இடம்பெறாமல் தான் இருக்கின்றனர்.

ஐபிஎல் தொடர் காரணமாக ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணியை நோக்கி படையெடுத்து வருவதால் இந்த மாதிரியான மாற்றங்கள் நடைபெறுவதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். அதே போல, கடந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி தவறவிட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை எப்படியாவது இந்திய அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது.

இதற்கு இந்திய அணியில் ஆட தேர்வாகும் வீரர்கள் யார் என்பதும் மிக முக்கியம். ஆனாலும் ஒவ்வொரு டி20 தொடரிலுமே இந்திய அணியில் உள்ள வீரர்கள் நிரந்தரமாக ஆடாததால் உலக கோப்பையில் எந்தெந்த வீரர்களை இந்திய அணி தேர்வு செய்யும் என்பதிலும் குழப்பமாக உள்ளது.

- Advertisement 2-

ஆனால் அதே வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியில் எந்த வீரர்களை இடம்பெறச் செய்யலாம் என்பதில் தங்களது ஐடியாக்களையும் கொடுத்து வருகின்றனர். பந்து வீச்சு, ஆல் ரவுண்டர் என எந்த துறையை எடுத்தாலும் அதற்கு போட்டியாக எக்கச்சக்க வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர்கள் தொடர்பாக பேசி இருந்த பார்த்தீவ் படேல், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை ஒப்பிட்டும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“அக்சர் படேல் தற்போது அந்த அளவுக்கு துல்லியமாக பந்து வீசி வருகிறார். பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியாத அளவுக்கான ஸ்லாட்டில் பந்து வீசுகிறார். அவரது பந்துவீச்சை அடிக்க வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்கள் தான் ஏதாவது முயற்சிகளை செய்து அதில் ஈடுபட வேண்டும். அதேபோல இறங்கி அடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் சில நேரம் அது கைகூடாமல் போகும்.

டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவை பற்றி நாம் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் அவரை விட நிலையான வீரராக அக்சர் படேல் உள்ளார். பவர் பிளேவில் பந்து வீசும் திறமை அவரிடம் உள்ளது ஜடேஜாவை விட சிறந்த வீரராக அவரை முன்னிறுத்தி உள்ளது.

டி20 போட்டி பந்துவீச்சில் பல வேரியேஷன்கள் காட்டும் அக்சர் படேல், அதில் மட்டுமில்லாமல் பேட்டிங்கில் எந்த இடத்தில் இறங்கினாலும் அடித்து ஆடி வருகிறார். இந்திய அணிக்கு பவர் ஹிட்டர் வேண்டுமென்றால் அந்த பணியை நிச்சயம் அக்சர் படேல் செய்வார். அதே போல டி20 போட்டியில் ஜடேஜாவை விட அக்சர் படேல் முன்னிலையிலும் இருக்கிறார்” என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

சற்று முன்