- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியால எனக்கு சப்போர்ட் பண்ண ஃபேன்ஸ்.. உண்மையாவே பெருமையா இருக்கு.. நெகிழ்ந்த பேட் கம்மின்ஸ்..

இந்தியால எனக்கு சப்போர்ட் பண்ண ஃபேன்ஸ்.. உண்மையாவே பெருமையா இருக்கு.. நெகிழ்ந்த பேட் கம்மின்ஸ்..

- Advertisement 1-

பேட் கம்மின்ஸ் கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கோப்பை உள்ளிட்டவற்றை வென்றது போல ஒரு கேப்டனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பெருமையைத் தேடி கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

ப்ளே ஆஃப் வரைக்கும் கம்பீரமாக முன்னேறி இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

ராஜஸ்தான் அணியை வென்றதுடன் இறுதி போட்டிக்கு ஹைதராபாத் முன்னேறி இருந்தாலும் லீக் போட்டி முழுக்க பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர்களால் பிளே ஆப் போட்டிகளில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. நிச்சயம் தங்களின் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி இறுதி போட்டியில் அதனை கம்பீரமாக சரி செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி உள்ளது ஹைதராபாத்.

ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் உள்ளிட்ட எந்த வீரமும் பெரிதாக ரன் அடிக்காமல் போக கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக அவர்கள் 113 ரன்களில் 19 வது ஓவரில் ஆல் அவுட்டாகி இருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆடி 11 வது ஓவரில் போட்டியை முடித்து வைத்திருந்தது.

- Advertisement 2-

இந்த வெற்றியின் காரணமாக மூன்றாவது முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ள கொல்கத்தா அணிக்கு பலவிதமான பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசியிருந்த ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், “கொல்கத்தா வீரர்கள் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். துரதிஷ்டவசமாக ஸ்டார்க் எங்களுக்கு எதிராக மாறிவிட்டார். இந்த இரவு மொத்தமாக நாங்கள் நன்றாக ஆடவில்லை. குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டி இரண்டிலும் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு இருந்ததால் வெற்றியும் கண்டனர்.

நாங்கள் 160 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகி இருக்கும். அதேவேளை இந்த சீசனில் எங்கள் பேட்ஸ்மேன்கள் ஸ்டைலாக ஆடி 250 ரன்கள் வரை மூன்று முறை அடித்திருந்ததை நல்ல விஷயமாக பார்க்கிறேன். இதில் நிறைய வீரர்களுடன் நான் இதற்கு முன்பு ஆடாத சூழலில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் இளம் வீரர்களுடனும் ஆடியது பெருமிதமாக உள்ளது.

மிகச் சிறந்த அணியாக நாங்கள் இருந்ததுடன் கடந்த இரண்டு மாதங்கள் மிகச் சிறப்பாகவும் அமைந்திருந்தது. நாங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் நிறைய கிரிக்கெட் ஆடி இருந்தாலும் அங்கே அதிகமாக நீலநிற ஜெர்சியை தான் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த முறை எங்களுக்கான கூட்டமும் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஐபிஎல் தொடர் ஒவ்வொரு முறையும் மேம்பட்டு கொண்டே வருவதால் இந்த முறையும் அது நடந்திருந்தது” என கூறியுள்ளார்.

சற்று முன்