- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி ஆடாம போனது ஒரு வகையில நல்லது தான்.. சோகத்திலும் புது கதை சொன்ன ராகுல்...

கோலி ஆடாம போனது ஒரு வகையில நல்லது தான்.. சோகத்திலும் புது கதை சொன்ன ராகுல் டிராவிட்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பெற்றிருந்த நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்பும் சற்று அதிகமாக தான் இருந்தது. சமீப காலமாக மிகச் சிறந்த ஆட்டத்தை இந்திய அணிக்காக வெளிப்படுத்தும் அவர் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் ஒரு கை பார்த்து விடுவார் என்று தான் அனைவருமே எண்ணி இருந்தனர்.

ஆனால் திடீரென சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகி உள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் அவர் நிச்சயம் இடம் பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் அவருக்கு பதிலாக வேறு வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு அது பற்றிய அறிவிப்பை இந்திய அணி வெளியிடுமா என்பதிலும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு இடையில் இந்திய அணியில் விராட் கோலி ஆடாமல் போனது பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “விராட் கோலி போன்ற ஒரு அற்புதமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது ஒரு பெரிய சிக்கல் தான். அவரைப் போன்ற ஒரு அற்புதமான வீரர் பற்றி அவருடைய சாதனைகளே பேசும். ஃபீல்டிங்கின் போதும் அவரது பங்களிப்பு இந்திய அணி வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

ஆனால் அதே வேளையில் விராட் கோலி ஆட முடியாமல் போனது இன்னொரு விஷயத்தில் மிகப்பெரிய பயனாக தான் உள்ளது. அதாவது கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் இது சிறந்த தருணமாக உள்ளது.

- Advertisement 2-

கோலிக்கு எந்தவித உதவியையும் செய்ய முடியாமல் போனதன் காரணமாக தான் அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட முடியாமல் போனது. ஆனால் வேறு ஒரு வீரர் தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருப்பதால் இதனை ஏற்றுக் கொள்ளலாம்” என டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரிலும் சில தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் மட்டும் கோலி களமிறங்காமல் போயிருந்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக முக்கியமான தொடரிலும் கூட கோலி களமிறங்காதது பற்றி பலவிதமான கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்