- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் டாஸ் ஜெயிச்சதும் முடிவு பண்ணிட்டேன்.. இங்கிலாந்தை வீழ்த்த முதல் நாளில் ஜடேஜா போட்ட ஸ்கெட்ச்..

ரோஹித் டாஸ் ஜெயிச்சதும் முடிவு பண்ணிட்டேன்.. இங்கிலாந்தை வீழ்த்த முதல் நாளில் ஜடேஜா போட்ட ஸ்கெட்ச்..

- Advertisement 1-

டெஸ்ட் போட்டி என வந்து விட்டாலே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு மிக மிக முக்கியமான ஆல் ரவுண்டராக இருந்து வருபவர் தான் ரவீந்திர ஜடேஜா. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியில் கே எல் ராகுல், விராட் கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருந்த போதிலும், போட்டியை தன் தோளில் சுமந்த ஜடேஜா, பேட்டிங்கில் பொறுப்பை உணர்ந்து கொண்டு நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.

முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவை ரோஹித்துடன் இணைந்து சதமடித்து மீட்டிருந்த ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெல்லவும் உதவி இருந்தார். அது மட்டுமில்லாமல், ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி சதமடித்து இருந்த ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்திருந்தது.

தனது சொந்த மண்ணில் பட்டையைக் கிளப்பி இருந்த ரவீந்திர ஜடேஜாவை அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கும் ரவிந்திர ஜடேஜா, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற சாதனையையும் தற்போது படைத்துள்ளார்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பி, இங்கிலாந்து அணிக்கு கடும் குடைச்சல் கொடுத்த ரவீந்திர ஜடேஜா, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பார் என்றே கருதப்படுகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசியிருந்த ரவீந்திர ஜடேஜா, “முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை பெரிதாக கட்டமைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அப்படி ஒரு இக்கட்டான சூழலில், என்னுடைய பலம் அறிந்து அதற்கேற்ப நான் ஷாட்களை அடிக்க முயற்சித்தேன்.

ரோஹித் சர்மா டாஸ் வென்றதுமே முதலில் பேட்டிங் செய்து பின்னர் பந்து வீச வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம். இது போன்ற பிட்ச்சில் அவ்வளவு எளிதாக விக்கெட்டுகள் கிடைத்துவிடாது. நாம் தான் கடினமாக உழைத்து விக்கெட்டுகள் எடுக்கும் முயற்சியை செய்ய வேண்டும். சரியான ஏரியாவில் பந்தை வீசினால் மட்டுமே இங்கே விக்கெட் எடுக்க முடியும்” என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சற்று முன்