- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கேவுக்காக முதல் முறை.. 15 வருஷம் கழித்து ஐபிஎல் தொடரில் ஜடேஜா செஞ்ச சிறப்பான சம்பவம்..

சிஎஸ்கேவுக்காக முதல் முறை.. 15 வருஷம் கழித்து ஐபிஎல் தொடரில் ஜடேஜா செஞ்ச சிறப்பான சம்பவம்..

-Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் ஆடி முடித்து நான்கு வெற்றிகளுடன் சிறப்பான நிலையிலும் இருந்து வந்தது. இந்த அணியில் ருத்துராஜ், தோனி, ரச்சின் ரவீந்திரா, பதிரானா, ஷிவம் துபே, முஸ்தாபிசுர் ரஹ்மான் என பலவீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் அதே வேளையில் அந்த அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பெரிதாக தடுமாற்றம் கண்டு வந்தார்.

ஒரே ஒரு போட்டியில் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்த ஜடேஜா மீதமுள்ள போட்டிகளில் ஒரே ஒரு விக்கெட் மட்டும்தான் கைப்பற்றி இருந்தார். அதேபோல பேட்டிங்கிலும் சொல்லிக் கொள்ளும்படியான இன்னிங்ஸ் ஆடாமல் இருந்து வந்த ஜடேஜா லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி 50 ரன்களைக் கடந்திருந்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், ரஹானே 36 ரன்களும் எடுத்திருந்தனர். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி இருந்த ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் மற்றும் ஷிவம் துபே இந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.

அது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் ஷிவம் துபேவிற்கு முன்பாக நான்காவது வீரராக களமிறங்கிய ஜடேஜா, 40 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். விக்கெட்டுகள் இழந்து சிஎஸ்கே ரன் சேர்க்க தடுமாறிய போது உள்ளே வந்த ஜடேஜா நிதானமாக ஆடி தடுமாறிக் கொண்டிருந்த அணியை மீட்டெடுத்து இருந்தார்.

-Advertisement-

மேலும் கடைசி கட்டத்தில் மொயீன் அலி மற்றும் தோனி ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் நல்ல ஸ்கோரையும் அவர்கள் எட்ட முடிந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே விக்கெட் இழப்பின்றி 60 ரன்களையும் கடந்திருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக முதல் முதலாக ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜா, அதன் பின்னர் சிஎஸ்கே அணியில் இணைந்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ரராயல்ஸ் அணிக்காக ஜடேஜா ஆடிய போது பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில், 44 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின்னர் ஏறக்குறைய 14 ஆண்டுகள் கழித்து தான் ஒரு ஐபிஎல் போட்டியில் அவர் 40 பந்துகளுக்கு மேல் தற்போது சந்தித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக அவர் 40 பந்துகளுக்கு மேல் சந்தித்து ரன் சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்