- Advertisement 3-
Homeவிளையாட்டுசிலிண்டர் விநியோகம் செய்யும் வேலையில் ரிங்கு சிங் தந்தை.. வீடியோவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலையில் ரிங்கு சிங் தந்தை.. வீடியோவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

- Advertisement 1-

சினிமா, அரசியல், விளையாட்டு என தங்களுக்கு பிடித்தமான துறையில் சாதிக்கும் பலரும் மிக எளிமையாக அந்த உயரத்திற்கு வந்துவிட மாட்டார்கள். மிகவும் பின்தங்கிய நிலையில் அவர்கள் இருப்பதுடன் பல்வேறு தியாகங்களை செய்து தங்களின் கனவை நோக்கி நடைபோட்டு அதில் வெற்றியும் காண்பார்கள். அந்த வகையில், கிரிக்கெட் போட்டியிலும் சாதித்தவர்கள் ஏராளம்.

கடந்த சில ஆண்டுகளில் கூட, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து ஐபிஎல் தொடரில் களமிறங்கி, பல முன்னணி வீரர்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய இளம் வீரர்களும் ஏராளம் பேர் உள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் தான் அதிரடி வீரர் ரிங்கு சிங். இவரது வீட்டில் அனைவருமே பின்தங்கிய சூழலில் இருந்த போது கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என ரிங்கு சிங் கனவு கண்டதுடன் அதற்கான பாதையிலும் தெளிவாக இருந்துள்ளார்.

முன்னதாக துப்புரவு வேலை செய்து வந்த ரிங்கு சிங், பின்னர் முதல் தர கிரிக்கெட்டில் சாதித்து ஐபிஎல் அணிகளின் கவனம் ஈர்த்தார். இதன் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வான அவர், பல முன்னணி பந்து வீச்சாளர்கள் பந்துகளை கிரவுண்டின் நாலாபுறமும் பறக்க விட்டார். மிடில் ஆர்டரில் பினிஷர் ரோலை மிக கச்சிதமாக செய்து வந்த ரிங்கு சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணியும் பாதையை திறந்து விட்டது.

பல தொடர்களில் இந்திய அணிக்காக களமிறங்கி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வரும் ரிங்கு சிங், இந்த ஆண்டின் டி 20 உலக கோப்பைத் தொடரில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று பல கிரிக்கெட் பிரபலங்கள் சொல்லும் அளவுக்கு உயரத்தை தொட்டுள்ளார். அதே போல, இடதுகை தோனி என்றும் பலரும் பாராட்டும் அளவுக்கு பெயர் எடுத்துள்ளார் ரிங்கு சிங்.

- Advertisement 2-

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் கிரிக்கெட்டில் சாதித்த பிறகும் கூட, சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலையை தனது தந்தை நிறுத்தாமல் செய்து வருவதாக பேட்டி ஒன்றில் ரிங்கு சிங் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது ரிங்கு சிங்கின் தந்தை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலிண்டர் விநியோகம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பொதுவாக, கிரிக்கெட்டில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இளம் வீரர்கள் சாதித்தால் அவர்களின் பெற்றோர்கள் அதுவே போதும் என தங்களின் வேலையை விட்டு விடுவார்கள். ஆனால், இன்று உலகமே கவனிக்கும் கிரிக்கெட் வீரராக ரிங்கு சிங் உயர்ந்த போதிலும் தனது தொழிலே தெய்வம் என அவரின் தந்தையுடைய அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்