- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த பையனை பத்தி பேச விரும்பல.. இப்ப தான் எங்க டீம்ல அது நடந்திருக்கு.. நிம்மதி...

அந்த பையனை பத்தி பேச விரும்பல.. இப்ப தான் எங்க டீம்ல அது நடந்திருக்கு.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரிஷப்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு ரிஷப் பந்தின் கம்பக் மிகப்பெரிய ஒரு உத்வேகத்தை கொடுத்து இருந்தாலும் இந்த முறை அவர்களால் தொடர் வெற்றிகளை குவிக்க முடியாமல் தடுமாறித் தான் வந்து கொண்டிருந்தனர். அப்படி ரிஷப் பந்த் மீண்டும் கேப்டன் ஆனதற்கு மத்தியில், அந்த அணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த அக்சர் படேல், டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா என பல வீரர்களைக் கொண்டு நிச்சயம் சிறந்த ஒரு தாக்கத்தை இந்த தொடரில் ஏற்படுத்துவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில விஷயங்கள் அவர்கள் பக்கம் கைகூடாமல் போனதன் காரணமாக, தோல்விகளை சந்திக்கும் சூழலும் உருவாகி இருந்தது. அப்படி இருக்கையில் தான் முதல் 5 போட்டிகள் ஆடியிருந்த டெல்லி அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக பெற்றிருந்தது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்த டெல்லி அணி, தங்களின் ஆறாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை சந்தித்திருந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ஆயுஷ் பதோனி அரைச்சதம் அடித்திருந்த நிலையில் எட்டாவது விக்கெட் இணை தான் அந்த அணியையும் தூக்கி நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பந்த், ஜேக் ப்ரேஷர் உள்ளிட்ட அனைவருமே டெல்லி அணியில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் அந்த அணி 19 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி அசத்தி இருந்தது.

அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு போன டெல்லி அணிக்கு இந்த வெற்றி நிச்சயம் நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், “இப்போது தான் சற்று நிம்மதியாக இருக்கிறது. இந்த வெற்றியைத்தான் நாங்கள் மோசமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நான் எனது அணி வீரர்களிடம் ஒரு சாம்பியன் போல யோசிக்க வேண்டும் என்றும் கடுமையாக சண்டை போட வேண்டும் என்றும் கூறி வருகிறேன்.

- Advertisement 2-

பந்து வீச்சில் நாங்கள் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. சில தனிநபர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு அணியாக ஆடும் போது சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். சிலது நம் கைமீறி சென்று விடும். இப்போது தான் அணியின் ஆடும் லெவன் சரியாக வந்து விட்டதாக கருதுகிறேன்.

ஆனாலும் அணியில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது பிரச்சினையாக இருக்கிறது. அதனை எப்போதுமே குறை கூறிக் கொண்டிருக்க முடியாது என நினைக்கிறேன். ஜேக் ப்ரேஷர் அணியில் சிறந்த 3 வது வீரராக கிடைத்து விட்டார். இருந்தாலும் இதைப்பற்றி பெரிதாக பேசாமல், அவர் தொடர்ந்து இதே ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்