- Advertisement -
Homeகிரிக்கெட்அடிச்சா 200 தான்.. 2 இளம் வீரர்களை கொண்டு மும்பையை மிரட்டிய ரிஷப் பந்த்.. வீணான...

அடிச்சா 200 தான்.. 2 இளம் வீரர்களை கொண்டு மும்பையை மிரட்டிய ரிஷப் பந்த்.. வீணான திலக், ஹர்திக் அதிரடி..

-Advertisement-

மீண்டும் ஒரு ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும் இருநூறு ரன்களை கடந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே இந்த போட்டியும் அமைந்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் இளம் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேஷர் மீண்டும் ஒரு மிரட்டல் ஆட்டத்தை இந்த போட்டியில் ஆடி இருந்தார்.

பும்ரா உள்ளிட்ட அனைத்து பந்துவீச்சாளர்கள் ஓவரிலும் ரன் சேர்த்த அவர், 27 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார். இதில் 11 ஃபோர்களும் 6 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 311 வரை இருந்ததுதான் தற்போது பல கிரிக்கெட் சாம்பியன்களை வியந்து பார்க்க வைத்துள்ளது. இவருடைய அதிரடிக்கு பின்னர், சாய் ஹோப் 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் சேர்க்க கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸும் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இதனால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தங்களின் அதிகபட்ச ஸ்கோரையும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பதிவு செய்திருந்தது. தொடர்ந்து கடின இலக்கை நோக்கி தங்களின் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் முடிந்த வரையில் இந்த போட்டியில் தங்களின் போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. தொடக்க வீரரான இஷான் கிஷன் 20 ரன்னிலும் மற்றொரு வீரரான ரோஹித் ஷர்மா 8 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.

பின்னர் வந்த சூர்யகுமார் 26 ரன்களில் அவுட்டாகி நடையை கட்ட, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். இந்த சீசனிலேயே நல்லதொரு பேட்டிங்கை தற்போது வெளிப்படுத்தி இருந்த ஹர்திக் பாண்டியா, 24 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

-Advertisement-

16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை மும்பை அணி எடுத்திருந்ததால் கடைசி நான்கு ஓவர்களில் 71 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அடுத்த 3 ஓவர்களில் 46 ரன்கள் சேர்க்கப்பட, அடுத்த 6 பந்துகளில் 25 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், துரதிர்ஷ்டவசமாக முதல் பந்தில் 32 பந்தில் 63 ரன்கள் சேர்த்த திலக் வர்மா ரன் அவுட்டானார்.

கடைசி ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் சேர்க்கப்பட, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் சேர்க்க, இது அவர்களின் அதிகபட்ச ஸ்கோராகவும் தற்போது மாறி உள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் இது அவர்களின் 2 வது தொடர் தோல்வியாகவும் தற்போது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்